சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் அடுத்த நகர்வாகா அதன் ஊடகங்களை தன்வசப்படுத்த திட்டம்


சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் அடுத்த நகர்வாகா அதன்  ஊடகங்களை தன்வசப்படுத்த திட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2020 7:48 AM GMT (Updated: 22 Oct 2020 7:48 AM GMT)

சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் அடுத்த நகர்வாக சீனாவின் அச்சு ஊடகங்களை தன்வசப்படுத்த திட்டமிட்டு உள்ளது.

வாஷிங்டன்

கடந்த சில மாதங்களாக தைவானுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. எந்த நேரத்திலும் சீனா தைவான் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது.இந்த நிலையில் தைவானுக்கு வான்வழி-தரைவழி கப்பல் ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுத அமைப்புகள் ஆகியவைகளை விற்க 1 பில்லியன் டாலர் (ரூ 7329 கோடி) மதிப்புள்ள ஒப்பந்தத்தில் இணைந்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
இந்தியா, இலங்கை, மாலத்தீவு மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு ஒரு பயணத்தைத் தொடங்குகிறார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அச்சுறுத்தல்களை தடுக்க நாடுகள் எவ்வாறு இணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்து இந்த நாடுகளுடன் அவர் விவாப்பார் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சீனாவின் பொதுவுடைமை சித்தாந்தத்திற்கு எதிராக அந்நாட்டை தளமாக கொண்டு செயல்படக்கூடிய ஆறு ஊடகங்களில் அமெரிக்கா தலையீட இருப்பதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

யிகாய் குளோபல், ஜிபேங் டெய்லி, தி ஜிங்மின் ஈவ்னிங், சீனாவின் சமூக விஞ்ஞானம், பீஜிங் ரிவீவ் மற்றும் எக்னாமிக் டெய்லி ஆகிய சீன ஊடகங்களில் அமெரிக்கா மாற்றங்களை செயல்படுத்த முனைந்துள்ளது.

மேலும், இந்த பத்திரிக்கைகளின் விற்பனை நிலையங்கள் பணியாளர்கள் பட்டியல் மற்றும் சொத்துக்களை வெளியுறவுத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் நவம்பர் 3-ம் தேதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக அமெரிக்காவால் சீனாவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கையாக இது கருதப்படுகின்றது.

இந்த விற்பனை நிலையங்கள் அமெரிக்காவில் வெளியிடக்கூடியவற்றில் நாங்கள் எந்த தடையும் விதிக்கவில்லை; அமெரிக்க மக்கள், இலவச பத்திரிகை எழுதிய செய்திகள் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியால் விநியோகிக்கப்படும் பிரச்சாரங்களுக்கு இடையில் மாறுபட்ட செய்திகளை வாசிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். என பாம்பியோ கூறியுள்ளார்.

Next Story