தன்னையே காப்பற்றிக்கொள்ளாதவர், மக்களை எப்படி காப்பாற்றுவார்? ஒபாமா கேள்வி + "||" + US election 2020: Barack Obama attacks Donald Trump for 'ignoring' coronavirus pandemic at Joe Biden rally
தன்னையே காப்பற்றிக்கொள்ளாதவர், மக்களை எப்படி காப்பாற்றுவார்? ஒபாமா கேள்வி
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி நடைபெற உள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் ஆகிய இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் ஒபாமா பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், பிலடெல்பியாவில் பிரச்சாரம் மேற்கொண்டஒபாமா பேசியதாவது:-
அமெரிக்கா ஒரு நல்ல மற்றும் ஒழுக்கமான இடம், ஆனால் நாம் மிகவும் முட்டாள்தனத்தையும் சத்தத்தையும் பார்த்துவிட்டோம். பணியின் முக்கியத்தை உணர்ந்து பணியாற்ற இயலாதவர் டிரம்ப் என்று ஒபாமா விமர்சித்துள்ளார். மேலும்
தன்னைக் காப்பாற்றவே டிரம்ப் முயற்சி எடுக்கவில்லை. இனி அவர் எப்படி மக்களை காப்பாற்றுவார்? என கேள்வி எழுப்பினார்.
இந்த இருண்ட காலங்களிலிருந்து இந்த நாட்டை வெளியேற்றுவதற்கான ஜோவின் திறனையும் கமலாவின் திறனையும் நம்பும்படி நான் கேட்டுக்கொள்கிறேன், மேலும் அதை மீண்டும் சிறப்பாக உருவாக்க எங்களுக்கு உதவுங்கள்.