பிரான்சில் அதிர்ச்சி; திடீரென ஒரே நாளில் 41,622 பேருக்கு கொரோனா பாதிப்பு


பிரான்சில் அதிர்ச்சி; திடீரென ஒரே நாளில் 41,622 பேருக்கு கொரோனா பாதிப்பு
x

பிரான்சில் புதிய பதிவாக 41,622 பேருக்கு கொரோனா வைரசின் பாதிப்புகள் அறியப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நேற்று புதிய பதிவாக 41,622 பேருக்கு கொரோனா வைரசின் பாதிப்புகள் அறியப்பட்டு உள்ளது.  இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 9,99,043 ஆக அதிரடியாக உயர்ந்து உள்ளது.

இதேபோன்று 165 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34,210 ஆக உயர்ந்து இருக்கிறது.

கடந்த வாரத்தில் பிரான்சில் 10,166 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  அவர்களில் 1,627 பேர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

வரும் வாரங்களில் நாட்டில் தொற்று நிலை கடினமடைய கூடும் என அந்நாட்டின் பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நம்முடைய சுகாதார சேவைகளும் கையாள முடியாத வகையில் அதிக அளவாக இருக்கும்.  உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர கூடும் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.

சூழ்நிலை மோசமடைந்து விட்டால் நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Next Story