அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடனை கொல்ல சதி ஆயுதங்களுடன் வாலிபர் சிக்கினார் + "||" + Man accused of plotting to kill Joe Biden after van with guns, explosives found in NC
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடனை கொல்ல சதி ஆயுதங்களுடன் வாலிபர் சிக்கினார்
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடனை கொல்ல சதியில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் ஆயுதங்களுடன் சிக்கினார்
வாஷிங்டன்
அமெரிக்க தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. இன்று டிரம்பிற்கும்-ஜோ பிடனுக்கும் நேரடி விவாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதி வேட்பாளரான ஜோ பிடனை கஒலி செய்யும் ந்ப்ப்க்கத்தில் ஆயுதங்களுடன் நடமாடிய இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த மே மாதம் நடந்த இந்த கைது நடவடிக்கையில் தொடர்புடைய 19 வயதான அலெக்சாண்டர் ஹில்லெல் ட்ரைஸ்மேன் மீது சிறார் ஆபாச படங்கள் மற்றும் காணொளிகள் வைத்திருந்ததாக மட்டுமே வழக்குப் பதிவ்உ செய்யப்பட்டுள்ளது.
அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் தொடர்பிலோ அல்லது, ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடனை கொல்ல திட்டமிட்டதாக அவர் மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்யவில்லை.சம்பவத்தன்று கன்னபொலிஸ் பகுதியில் செயல்பட்டுவரும் ஒரு வங்கியின் ஊழியர் ஒருவர், சந்தேகத்தின் அடிப்படையில் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
தகவலையடுத்து சம்பவயிடத்திற்கு வந்த போலீசார், அதிரடியாக ஒரு வாகனத்தை சோதனை செய்ததில் துப்பாக்கிகள், வெடிமருந்துகள், வெடிகுண்டு தயாரிக்க உதவும் புத்தகங்கள் மற்றும் 500,000 டாலர் தொகை என போலீசாரால் கைபற்றப்பட்டது
இதனையடுத்து விசாரணையை முடுக்கிவிட்ட போலீசார், 19 வயதான அலெக்சாண்டர் ஹில்லெல் ட்ரைஸ்மேன் என்பவரை கைது செய்தனர்.விசாரணையில், அந்த நபர் ஜோ பைடன் தொடர்பில் நுணுக்கமாக தகவல் சேகரித்துள்ளதும், கூட்டம் தொடர்பான தகவல்களை திரட்டியுள்ளதும், இனவெறி சித்தாந்தங்கள் மீது ஈர்ப்பு கொண்டவர் எனவும் தெரிய வந்தது.மட்டுமின்றி, சிறார் தொடர்பான ஆபாச காணொளிகள் மற்றும் புகைப்படங்களையும் போலீசார் அவரிடம் இருந்து கைப்பற்றினர்.
மேலும், மே 3 ஆம் தேதி ஜோ பைடனின் குடியிருப்பு அமைந்துள்ள பகுதிக்கு உட்பட்ட ஒரு உணவகம் வரை சென்று திரும்பியதும் விசாரணையில் தெரிய வந்தது.மட்டுமின்றி தமது அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் மே 16 ஆம் தேதி ஒரு குறிப்பு தயார் செய்துள்ளதும்,அதில் ஜோ பிடன் மீது தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளதும், விசாரணை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது.
மேலும் கடந்த மார்ச் முதல் மே மாதம் வரையில் ஜோ பிடன் குறித்த அனைத்து தகவல்களையும் அந்த நபர் திரட்டியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிகளில் எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்காத ஜனாதிபதி நான்தான் என பிரிவு உபசார விழாவில் டொனால்டு டிரம்ப் பேசினார்.