உலக செய்திகள்

"இந்தியா அசுத்தமானது" விவாதத்தில் டொனால்டு டிரம்ப் நட்பு நாடு மீது சேற்றை அள்ளி வீசினார் + "||" + US Presidential Debate 'Look at India, it's filthy': Trump throws mud on ally over climate change

"இந்தியா அசுத்தமானது" விவாதத்தில் டொனால்டு டிரம்ப் நட்பு நாடு மீது சேற்றை அள்ளி வீசினார்

"இந்தியா அசுத்தமானது" விவாதத்தில் டொனால்டு டிரம்ப் நட்பு நாடு மீது சேற்றை அள்ளி வீசினார்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விவாதத்தில்'இந்தியாவைப் பாருங்கள், அது அசுத்தமானது என காலநிலை மாற்றம் தொடர்பாக டிரம்ப் நட்பு நாடு மீது சேற்றை அள்ளி வீசினார்.
வாஷிங்டன்

நவம்பர் 3 ம் தேதி அமெரிக்கர்கள் ஒரு புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்ய உள்ளனர். கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கபட்டு உள்ள அமெரிக்கர்கள் வாக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 
இனவெறி மற்றும் போலீஸ் மிருகத்தனம் போன்ற முக்கிய பிரச்சினைகள் தவிர, அவ்வப்போது பல பிரச்சினைகளுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
அமெரிக்க தேர்தல் விதிப்படி குறைந்தது 3.5 கோடி மக்கள் ஏற்கனவே வாக்களித்து விட்டனர். இது மொத்த வாக்குகளில் நான்கில் ஒரு பங்கிற்கு மேல் ஆகும் 

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் அவரது ஜனநாயக போட்டியாளரான ஜோ பிடனும் இன்று தங்கள் இரண்டாவது மற்றும் இறுதி விவாதத்தில் கலந்து கொண்டனர். அவர்களிடையே நடைபெற்ற விவாதம் வருமாறு:-

 ஜோ பிடன் : அமெரிக்க தேர்தலில் குறுக்கிட வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய வரியையே கட்டவில்லை

சீனாவில் டொனால்ட் டிரம்புக்கு ரகசிய வங்கிக்கணக்குகள் இருக்கிறது. சீனா, ரஷ்யா, உக்ரைனிடம் இருந்து பணம் எதுவும் பெறவில்லை.

டொனால்டு டிரம்ப் : அமெரிக்காவுக்கு கொரோனா பரவ நான் காரணமில்லை; தவறு செய்தது சீனாதான் இந்தாண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி வந்துவிடும்

வடகொரிய விவகாரத்தை ஒபாமா சிக்கலாக்கி வைத்திருந்தார். வடகொரிய விவகாரத்தில் ஒபாமா செய்ய முடியாததை நாங்கள் செய்தோம்

கறுப்பர்கள், ஹிஸ்பானியர்கள் மற்றும் பிற சமூகங்களுக்கான சிறந்த வேலை வாய்ப்பின்மை எண்ணிக்கையை நாங்கள் கொண்டிருந்தோம். நாங்கள் வெற்றிக்கான பாதையில் செல்கிறோம். நான் வரிகளை குறைக்க விரும்புகிறேன், ஆனால் அவர் அதை அதிகரிக்க விரும்புகிறார்.

ஜோ பிடன்: நான்  அமெரிக்க ஜனாதிபதியானா. நான் உங்கள் பிரதிநிதி.யானால் புனைகதைக்கு மேல் அறிவியலைத் தேர்ந்தெடுப்பேன். பொருளாதாரம் முன்னேறுவதை உறுதி செய்வேன். வாக்குச்சீட்டில் இருப்பது இந்த நாட்டின் மரியாதை - கண்ணியம், முன்னேற்றம் ஆகும். நான் மீண்டும் பாரிஸ் ஒப்பந்தத்தில் சேரப் போகிறேன், சீனாவை சட்டங்களுக்குக் கட்டுப்பட வைப்பேன்.

டொனால்டு டிரம்ப்: எங்களிடம் 'டிரில்லியன் மரங்கள்' திட்டம் உள்ளது. நமக்கு சுத்தமான காற்று மற்றும் நீர் வேண்டும். 35 ஆண்டுகளில் சிறந்த கார்பன் உமிழ்வு எண்கள் நம்மிடம் உள்ளன. 

சீனாவைப் பாருங்கள், அது எவ்வளவு இழிவானது. ரஷ்யாவைப் பாருங்கள். இந்தியாவைப் பாருங்கள், அது அசுத்தமானது. காற்று அசுத்தமானது. நாம் நம்பமுடியாத வேலைகளை செய்துள்ளோம்.

ஜோ பிடன்: அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்கள் சூரிய மற்றும் காற்றாலை ஆகும். காற்றாலைகள் புற்றுநோயை ஏற்படுத்தும் என்று அவர் நினைக்கிறார்.

டொனால்ட்டிரம்ப்: உங்களில் யாரையும் விட காற்று ஆலைகளைப் பற்றி எனக்குத் தெரியும். அது பறவைகளை கொல்கிறது.

ஜோ பிடன்: அதைச் சொல்லும் ஒரு விஞ்ஞானியைக் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்


தொடர்புடைய செய்திகள்

1. ஜோ பைடன் அரிசோனா - ஜார்ஜியா மாநிலங்களை கைப்பற்றினார்; வாக்கு எண்ணிக்கை 306 ஆக உயர்வு
ஜோ பைடன் அரிசோனா மற்றும் ஜார்ஜியா மாநிலங்களை கைப்பற்றி உள்ளார். அவரது வாக்கு எண்ணிக்கை 306 ஆக உயர்ந்தது. டிரம்ப் 232 வாக்கு எண்ணிக்கையில் உள்ளார்.
2. ஜனவரி 20 க்குப் பிறகு வேறு நிர்வாகம்... தோல்வியை சூசகமாக ஒப்புக்கொண்ட டொனால்டு டிரம்ப்...?
ஜனவரி 20 க்குப் பிறகு அவர் அதிபராக இருக்க மாட்டார் என்பதை சூசமாக தெரிவித்து தனது தோல்வியை ஒப்புக்கொள்ள டொனால்டு டிரம்ப் நெருங்கி உள்ளார்.
3. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது வெட்கக்கேடானது - ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வி அடைந்ததை டிரம்ப் ஏற்க மறுப்பது வெட்கக்கேடானது என ஜோ பைடன் விமர்சித்தார்.
4. தேர்தல் முடிவுகளுக்கு முன் டிரம்ப் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளை நீக்கி விசுவாசிகளை நியமித்தார்
தேர்தல் முடிவுகளுக்கு முன் டிரம்ப் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளை நீக்கி தனது விசுவாசிகளை நியமித்து உள்ளார். இதனால் பென்டகன் அதிகாரிகளிடையே எச்சரிக்கை உணர்வை தூண்டி உள்ளது.
5. அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்வியை டிரம்ப் ஏற்க மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது- ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்வியை டிரம்ப் ஏற்க மறுப்பது தர்மசங்கடமாக உள்ளதாக ஜோ பைடன் கூறியுள்ளார்.