உலக செய்திகள்

சீனாவின் உத்தரவின் பேரில் பூட்டான் பிரதமரிடம் பேசிய இம்ரான்...!! + "||" + Pakistan PM Imran Khan speaks to Bhutanese counterpart Lotay Tshering

சீனாவின் உத்தரவின் பேரில் பூட்டான் பிரதமரிடம் பேசிய இம்ரான்...!!

சீனாவின் உத்தரவின் பேரில் பூட்டான் பிரதமரிடம் பேசிய இம்ரான்...!!
சீனாவின் திட்டங்களை நிறைவேற்ற பூட்டானுடன் நெருக்காமாக இருக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது.
பீஜிங்

இந்தியாவிற்கு எதிராக நேபாளத்தை தூண்டியதை போலவே, பூட்டானை தூண்டடும் சீனாவின் முயற்சி தோல்வி அடைந்தது. 

எல்லை தகராறு குறித்த அச்சத்தைக் காட்டி,  பொருளாதார உறவுகளை ஈர்ப்பதன் மூலம் பூட்டானை இந்தியாவுக்கு எதிராகத் திருப்ப சீனா முயன்றது. இருப்பினும், இந்த முயற்சியில் ஒவ்வொரு முறையும் அது தோல்வியுற்றது. ஏனென்றால் பூட்டான் இந்தியாவுடன் நல்லுறவை பராமரிக்கவே விரும்புகிறது. பூட்டானின் வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்களிப்பு உண்டு.

பூட்டானிய தலைமை சீனாவின் நோக்கம் மற்றும் சதி வேலைகளை நன்கு அறிந்துள்ளது. இந்தியா தனது மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் ஒன்றாக நிற்பதைப் போல், சீனாவிடன்  எதிர்பார்க்க முடியாது என்பதையும் பூட்டான் நன்கு அறியும். எனவே, சீனா கொடுக்கும் சலுகைகளை, நிராகரித்து இந்தியாவுடன் நெருக்கமாக இருக்கவே விரும்புகிறது.

தனது திட்டம் தோல்வி அடைந்ததால் சீனா இப்போது பாகிஸ்தானை இந்த பணியில் ஈடுபடுத்தியுள்ளது. சீனாவின் திட்டங்களை நிறைவேற்ற பூட்டானுடன் நெருக்காமாக இருக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது.
இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று பூட்டானின் பிரதமர் லொட்டே ஷெரிங் உடன் தொலைபேசியில் பேசினார். பாகிஸ்தான் பிரதமர் பூட்டான்பிரதமருடன் பேசுவது இதுவே முதல் முறை ஆகும்.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இரு தலைவர்களும் பரஸ்பர ஒத்துழைப்பு, கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். பூட்டானின் கொரோனா வைரத்ரானக்கு எ நடவடிக்கைகளை இம்ரான் கான் பாராட்டினார். இது மட்டுமல்லாமல், பூட்டான் பிரதமர் பாகிஸ்தான்பயணம் மேற்கொள்ள வேண்டும் என இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.

இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது, ​​பூட்டானுடனான பாகிஸ்தானின் நெருங்கிய உறவின் முக்கியத்துவத்தை கான் கோடிட்டுக் காட்டினார். அதே நேரத்தில் வழக்கமான இருதரப்பு உறவுகள்,  வளரும் நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது என கூறி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஹாங்காங்கில் சீன அரசுக்கு எதிராக போராடிய பத்திரிகை அதிபருக்கு சிறை
சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் கடந்த 2019-ம் ஆண்டு சீனாவுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் வெடித்தது.
2. 13 லட்சம் லிட்டர் அணுக்கதிர் கழிவுநீரை கடலில் கலக்கும் ஜப்பான் அரசின் முடிவுக்கு சீனா கண்டனம்
புகுஷிமாவில் அணு உலையில் இருந்து 13 லட்சம் லிட்டர் கழிவுநீரை கடலில் கலக்க முடிவு செய்துள்ளதாக ஜப்பான் அரசு கூறியுள்ளது.
3. சீனா: நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு; 21 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்
சீனாவில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட 21 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
4. இந்தோனேசியாவில் பாகிஸ்தானியர் உள்பட 13 பேருக்கு மரண தண்டனை; போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது.
5. மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் ‘பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டால் சுட்டு கொல்லப்படுவார்கள்’; சர்ச்சையை கிளப்பிய பா.ஜனதா தலைவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
மேற்கு வங்காளத்தின் பிர்பும் மாவட்ட பா.ஜனதா தலைவரான துருவா சகா, நேற்று முன்தினம் நானூரில் பிரசாரம் மேற்கொண்டார்.