உலக செய்திகள்

சீனாவிலிருந்து வரும் மஞ்சள் தூசி கொரோனா வைரசை கொண்டுவரும் வட கொரியா எச்சரிக்கை + "||" + Coronavirus: North Korea warnings over 'yellow dust coming from China'

சீனாவிலிருந்து வரும் மஞ்சள் தூசி கொரோனா வைரசை கொண்டுவரும் வட கொரியா எச்சரிக்கை

சீனாவிலிருந்து வரும் மஞ்சள் தூசி கொரோனா வைரசை கொண்டுவரும் வட கொரியா எச்சரிக்கை
சீனாவிலிருந்து வரும் மஞ்சள் தூசி காற்று கொரோனா வைரசை கொண்டுவரக்கூடும் என வட கொரியா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
பியோங்யாங்

சீனாவிலிருந்து வீசும் "மஞ்சள் தூசி" காற்று கொரோனா வைரஸைக் கொண்டு வரக்கூடும் என்ற அச்சத்தில் வட கொரியா தனது குடிமக்களை வீட்டுக்குள் இருக்குமாறு எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தலைநகர் பியோங்யாங்கின் வீதிகள் வியாழக்கிழமை கிட்டத்தட்ட காலியாக இருந்தன

வட கொரிய அரசு  நாட்டில் கொரோனா வைரஸ் இல்லைஎன்று கூறுகிறது, ஆனால் ஜனவரி முதல் கடுமையான எல்லை மூடல்கள் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

பருவகால தூசி மேகங்களுக்கும் கோவிட் -19 க்கும் எந்த தொடர்பும் இல்லை. இருப்பினும்,  குடிமக்கள் முககவசம் அணியுமாறும், வீதிகளில் நடமாட வேண்டாம் என்றும் வடகொரிய அரசு கேட்டு கொண்டுள்ளது.

அரசு கட்டுப்பாட்டில் உள்ள கொரிய மத்திய தொலைக்காட்சி (கே.சி.டி.வி)  சிறப்பு வானிலை செய்திகளை ஒளிபரப்பியது, அப்போது மஞ்சள் தூசி வருவதை எச்சரித்தது. மேலும் இது வெளிப்புற கட்டுமான பணிகளுக்கு நாடு தழுவிய தடையை அறிவித்தது.

மஞ்சள் தூசி என்பது மங்கோலிய மற்றும் சீன பாலைவனங்களிலிருந்து வரும் மணல்காற்றை குறிக்கிறது, அவை ஆண்டின் சில நேரங்களில் வடக்கு மற்றும் தென் கொரியாவில் வீசுகின்றன. இது நச்சு தூசியுடன் ஒன்றிணைந்துள்ளது, பல ஆண்டுகளாக இரு நாடுகளிலும் சுகாதார கவலைகளை எழுப்பியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. உலகமே கொரோனாவிடம் போராடும் நிலையில் சீனாவின் உகான் நகரில் இயல்பு நிலை திரும்பியது
உலகமே கொரோனாவிடம் போராடி வரும் நிலையில், சீனாவின் உகான் நகரிலோ இயல்பு நிலை திரும்பி விட்டது.
2. இந்தியாவில் இதுவரை நடந்துள்ள கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 19 கோடியை கடந்தது
இந்தியாவில் இதுவரை நடந்துள்ள கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 19 கோடியை கடந்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
3. தமிழகத்தில் மேலும் 551- பேருக்கு கொரோனா
தமிழகத்தில் மேலும் 551- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ராஜஸ்தானில் இரவு நேர ஊரடங்கு ரத்து
ராஜஸ்தானில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
5. ஜப்பானில் மாறுபட்ட கொரோனா கண்டுபிடிப்பு; இங்கிலாந்து ரகத்தை சேர்ந்தது அல்ல !
இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனாவில் இருந்து மாறுபட்ட புதிய வகை உருமாறிய கொரோனா, ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.