இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து: 11 பேர் பலி


இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து: 11 பேர் பலி
x
தினத்தந்தி 23 Oct 2020 6:35 PM GMT (Updated: 23 Oct 2020 6:35 PM GMT)

இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

ஜகார்தா,

இந்தோனேசியாவின் தெற்று சுமத்ரா மாகாணத்தின் மவ்ரா இமிம் ரிஜென்சி பகுதியில் சட்டவிரோதமாக நிலக்கரி தோண்டி எடுக்கும் வேலையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சுரங்க நடவடிக்கையின் போது எதிர்பாராத விபத்துக்களும் நிகழ்கிறது.

இந்நிலையில், ரிஜென்சி பகுதியில் உள்ள ஒரு மலைப்பகுதியில் சட்டவிரோதமாக தோண்டப்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் 10-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைசெய்துகொண்டிருந்தனர். 20 மீட்டர் ஆளத்தில் இந்த சுரங்க வேலைகள் நடைபெற்று வந்தது. அப்போது அங்கு பெய்த கனமழை காரணமாக சுரங்கத்தின் மேற்பரப்பில் இருந்த மண் இடிந்து விழுந்தது.

இதில், சுரங்கவேலை செய்துகொண்டிருந்தவர்கள் மண்ணுக்குள் புதைந்ததனர். தகவலறிந்து அக்கம்பக்க கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். விபத்தில் பலியான அனைவரது உடல்களும் மீட்கப்பட்டுவிட்டதாக மீட்ப்புக்குழு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் சட்டவிரோத சுரங்கங்களில் ஏற்படும் விபத்துக்களால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story