இலங்கையில் அதிபருக்கு மீண்டும் கூடுதல் அதிகாரம்


இலங்கையில் அதிபருக்கு மீண்டும் கூடுதல் அதிகாரம்
x
தினத்தந்தி 24 Oct 2020 1:18 AM GMT (Updated: 24 Oct 2020 1:18 AM GMT)

இலங்கையில் அதிபருக்கு மீண்டும் அதிக அதிகாரம் வழங்கப்படுகிறது. இதற்கான அரசியல் சாசன திருத்த மசோதா நிறைவேறியது.

கொழும்பு, 

இலங்கையில் அதிபராக கோத்தபய ராஜபக்சே உள்ளார்.  அவரது  சகோதரர் மகிந்த ராஜபக்சே பிரதமராக உள்ளார்.  இலங்கையில் 2015-ல் சிறிசேனா அதிபரானபோது அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனத்தின் 19 (ஏ) பிரிவு திருத்தப்பட்டது. 

1978-ம் ஆண்டு முதல் இலங்கையில் அதிபருக்கு இருந்து வந்த அதிகாரங்கள் இந்த சட்ட திருத்தத்தின்மூலம் குறைக்கப்பட்டன. ஆனால் தற்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், அவரது சகோதரர் பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் அதிபருக்கு கூடுதல் அதிகாரங்களை தரும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய முடிவு எடுத்தனர்.

இதற்கான அரசியல் சாசன 20-வது திருத்த மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது. இரவில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டதில் இந்த மசோதா மூன்றில் இருபங்கு பெரும்பான்மையுடன் நிறைவேறியது.

225 பேரை கொண்ட நாடாளுமன்றத்தில் மசோதாவுக்கு ஆதரவாக 156 பேரும், எதிராக 65 பேரும் ஓட்டு போட்டது குறிப்பிடத்தக்கது.இதன்மூலம் அதிபருக்கு மீண்டும் கூடுதல் அதிகாரங்கள் கிடைக்கின்றன. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி அதிபருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. 

Next Story