உலக செய்திகள்

லடாக்கில் இந்தியா-சீனா பதற்ற நிலைமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் - அமெரிக்கா + "||" + US wants to ensure India-China standoff doesn't escalate

லடாக்கில் இந்தியா-சீனா பதற்ற நிலைமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் - அமெரிக்கா

லடாக்கில் இந்தியா-சீனா பதற்ற நிலைமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் - அமெரிக்கா
லடாக்கில் இந்தியா-சீனா பதற்ற நிலைமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள விரும்புவதாக அமெரிக்க மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன்

லடாக்கில் இந்தியா-சீனா நிலைப்பாட்டைச் சுற்றியுள்ள நிலைமையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், நிலைமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள விரும்புவதாகவும் டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள்  தெரிவித்தனர். 

இந்த கருத்து இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான 2 + 2 உரையாடலுக்கு முன்னால் வந்துள்ளது குறிப்பிட தக்கது.

தென்கிழக்கு ஆசியாவிலும், தென் சீனக் கடலிலும் இந்தியாவின் ஈடுபாட்டை அமெரிக்கா வரவேற்றதாக ஆன்லைன் மாநாட்டில் அமெரிக்க  அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் ஆகியோர் அடுத்த வாரம் 2 + 2 உரையாடலுக்கு இந்தியா வர உள்ளனர். அவர்கள் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

சீனாவின் அதிகரித்துவரும் ஆக்கிரமிப்பு நடத்தைகளை எதிர்கொள்ள இந்தியா போன்ற "ஒத்த எண்ணம் கொண்ட" நாடுகளுடன் இணைந்து செயல்படுவது முக்கியம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் கழிவுநீர் தேக்கத்தில் இருந்து நச்சு நீர் கசிவு
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் தம்பா நகரில் 77 ஏக்கர் நிலப் பரப்பளவில் மிகப்பெரிய கழிவுநீர் தேக்கம் அமைந்துள்ளது.
2. அமெரிக்காவில் ஒரே நாளில் 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை
கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக அளவில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன.
3. வடகொரியா விவகாரம்: ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா நாடுகள் உறுதி
வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரிக்கும் திட்டத்தால் அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே சுமுகமான உறவு இல்லை.
4. கிழக்கு லடாக்கில் மீதமுள்ள பகுதிகளில் இருந்தும் விரைவில் படை விலக்கப்படும்; மத்திய அரசு நம்பிக்கை
கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இருநாடுகளும் படைகளை குவித்தன.
5. ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் 90 சதவீதம் பேர் தடுப்பூசிக்கு தகுதி - ஜனாதிபதி ஜோ பைடன்
ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் 90 சதவீதம் பேர் தடுப்பூசிக்கு தகுதி பெறுவார்கள் என்று ஜனாதிபதி ஜோ பைடன் திங்களன்று தெரிவித்தார்.