உலக செய்திகள்

ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...? + "||" + UK QUEEN FAVOURITE DRINKS

ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...?

ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...?
ஊருக்குதான் உபதேசம் இங்கிலாந்து மகாராணி ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
லண்டன்

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துவார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இண்டிபெண்டன்ட் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், இங்கிலாந்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத் எந்த வகை மதுவை அருந்துவார் மற்றும் அதன் அளவுகோல் குறித்த விபரங்களை வெளியிட்டது.

அதன்படி, தினமும் மதிய உணவு வேளைக்கு முன்னர் ஜின் மற்றும் டுபோனெட் ஒயின் மதுவகைகளை ஒன்றாக கலந்து அதனுடன் எலுமிச்சை மற்றும் ஐஸ் கட்டிகளை கலந்து குடிப்பார்.

மதிய உணவு உண்ணும் போதே ஒயின் மதுவையும் அருந்துவார் என கூறப்பட்டுள்ளது. மாலை வேளையில் ஜின் மற்றும் வெர்மவுத் கலந்த கார்ட்டினி (காக்டெய்ல்) மதுவை மகாராணி அருந்துவார்.

இவை எல்லாவற்றின் அளவை சேர்த்தால் ஒரு நாளைக்கு 6 யூனிட் அளவு மதுவை எலிசபெத் மகாராணி குடிக்கிறார்.வாரத்துக்கு 40.6 யூனிட் அளவாக இது உள்ளது.சாதாரண குடிமக்கள் வாரத்துக்கு 14 யூனிட் அளவு வரை மட்டுமே மது அருந்த வேண்டும் என்பது இங்கிலாந்து அரசின் அறிவுறுத்தலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் புதிய சுகாதாரத்துறை மந்திரியாக நாதிம் ஜஹாவி நியமனம்
இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பை மேற்பார்வையிட, புதிய சுகாதாரத்துறை மந்திரியாக நாதிம் ஜஹாவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2. இங்கிலாந்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - போரிஸ் ஜான்சன் திட்டம் என்ன?
இங்கிலாந்தில் வரும் டிசம்பர் 2 ஆம் தேதியோடு நாடு தழுவிய ஊரடங்கை முடித்துக்கொள்ள போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார்.
3. பிரிட்டன் மக்களை நடுங்க வைத்த தொடர் கொலையாளி கொரோனா பாதிப்பால் மரணம்
பத்திரிகைகளால் யார்க்‌ஷையர் ரிப்பர் என எழுதப்பட்டவரும் வடக்கு இங்கிலாந்து மக்களை நடு நடுங்க வைத்த, கொலையாளி கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
4. இங்கிலாந்து அரசுக்கு ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி கிடைப்பதில் தாமதம்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியை இங்கிலாந்து அரசுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
5. இதுவரை இல்லாத அளவுக்கு இங்கிலாந்து கடனில் மூழ்க போகும் இங்கிலாந்து நிபுணர்கள் கணிப்பு
கொரோனாவால் இதுவரை இல்லாத அளவுக்கு இங்கிலாந்து கடனில் மூழ்க இருப்பதாகவும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.