உலக செய்திகள்

160 பெண்கள் பாலியல் கொடுமை குற்றவாளி சிக்கினான் + "||" + Italian Man Arrested on Suspicion of 160 Rapes and Assaults on Underage Girls

160 பெண்கள் பாலியல் கொடுமை குற்றவாளி சிக்கினான்

160 பெண்கள் பாலியல் கொடுமை  குற்றவாளி சிக்கினான்
இளம் பெண்கள் மீதான தாக்குதல் உட்பட 160 பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான இத்தாலிய நபரை ஜெர்மன் எல்லையில் பிரான்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.
பாரிஸ்

160 வயது பாலியல் பலாத்காரங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை செய்ததாக 52 வயது உடைய இத்தாலி நாட்டை சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிரான்ஸ் போலீசார் கைது செய்தனர்.

ஜெர்மன் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அக்டோபர் 7 ஆம் தேதி பிரான்ஸ் போலீசாருக்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.மேலும், அவர் கிழக்கு பிரான்சில் அல்சேஸில் குடியேற திட்டமிட்டு எல்லையைத் தாண்டியுள்ளார் என்ற தகவலையும் அளித்துள்ளனர். இதனையடுத்து அதிரடி நடவடிக்கையில் களமிறங்கிய பிரான்ஸ் போலீசார் அக்டோபர் 16 ஆம் தேதி அந்த நபரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் அவர் ஜெர்மனியிடம் ஒப்படைக்கப்படுகிறார்.

முதல் கட்ட விசாரணையில் கடந்த 2000 முதல் 2014 வரையான காலகட்டத்தில் பெண்கள் மற்றும் சிறார் மீதான வன்கொடுமை புகார் தொடர்பாக  போலீசார் அந்த நபரை தேடி வந்துள்ளனர். ஜெர்மனி அதிகாரிகளும் அந்த நபர் மீது 122 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்வேறு வழக்குகள் அந்த நபர் மீது பதிவு செய்ய்ப்பட்டு உள்ளது. பல ஆண்டுகளாக சொந்த மகளையே அந்த நபர் துஷ்பிரயோகம் செய்துள்ளதை பிரான்ஸ் போலீசார் உறுதி செய்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. 20 நாட்களாக மழைநீர் குழாயில் சிக்கி தவித்த பெண் நிர்வாண நிலையில் மீட்பு
அமெரிக்காவின் புளோரிடாவில் 20 நாட்களாக மழைநீர் குழாயில் தவித்த பெண் நிர்வாண நிலையில் மீட்பு
2. சிறிய காதுகள், வெட்டப்பட்ட உதடுகள்,மூக்கு, என வேற்றுகிரகவாசியாக உருமாறி வரும் வாலிபர்
தனது மூக்கு, காது, உதடு மற்றும் நாக்குகளை அறுத்துக்கொண்டு தன்னை வேற்று கிரக வாசியாக உருமாற்றிக்கொண்டுள்ள இளைஞர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.
3. ஒரே காரில் 25 பேர் பயணம் டிரக் மோதி விபத்தில் 13 பேர் பலி
கலிபோர்னியா மாகாணத்தில், ஒரே காரில் 25 பேர் பயணம் செய்தபோது, காரின் மீது டிரக் மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர்.
4. "என் காலத்துக்கு பிறகு அவன் கஷ்டப்படக்கூடாது" வளர்ப்பு நாய் மீது ரூ.36 கோடி சொத்தை எழுதிவைத்தவர்
என் காலத்துக்கு பிறகு அவன் கஷ்டப்படக்கூடாது வளர்ப்பு நாய் மீது ரூ.36 கோடி சொத்தை எழுதிவைத்த அதன் உரிமையாளர்.
5. சீனாவில் பிறப்பு விகிதம் 30% குறைந்தது அதிர்ச்சியூட்டும் தகவல்
சீனாவில் முந்தைய ஆண்டு பிறப்பு விகிதத்தை விட 2020-ஆம் ஆண்டின் பிறப்பு விகிதம் 30 சதவீதம் குறைந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.