உலக செய்திகள்

போலந்து அதிபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Corona vulnerability confirmed to Polish president

போலந்து அதிபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

போலந்து அதிபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
போலந்து நாட்டு அதிபர் ஆண்டிரெஜ் துதாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
வார்சா,

போலந்து நாட்டில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் மத்தியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  இது தொடர்ந்து அந்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

போலந்தில் இதுவரை மொத்தம் 2,41,946 பேருக்கு பாதிப்புகள் அறியப்பட்டு உள்ளன.  4,351 பேர் உயிரிழந்து உள்ளனர்.

சமீபத்திய உயிரிழப்பு உயர்வால் கடந்த 10ந்தேதி முதல் அந்நாட்டில் முக கவசங்களை அணிவது மீண்டும் பரவலாக கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளது.  நிறுவனங்களில் பணிபுரிவதில் கட்டுப்பாடுகள் விதிப்பு, பெரிய அளவிலான நிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும் விடுமுறைகளை குடும்பத்துடன் செலவிடுவது ஆகியவற்றை நிறுத்தி வைப்பது போன்ற நடைமுறைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், போலந்து அதிபர் ஆண்டிரெஜ் துதாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று அதிபருக்கான செய்தி தொடர்பு அதிகாரி பிளாஜெஜ் ஸ்பைசால்ஸ்கி தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

எனினும், அதிபர் நலமுடனேயே உள்ளார்.  அவருக்கு தேவையான மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று அவர் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் 94 லட்சம் கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 38 ஆயிரத்து 772 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
2. குரோசியாவில் பிரதமர் மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி; தனிமைப்படுத்தி கொண்ட பிரதமர்
குரோசியா நாட்டு பிரதமர் தனது மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.
3. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.92 லட்சம் ஆக உயர்வு
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 41 ஆயிரத்து 810 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
4. கொரோனா தொற்று; 6.2 கோடிக்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதும் பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையானது 6.2 கோடியை கடந்து உள்ளது.
5. நவ: 28 : கொரோனா பாதிப்பு தமிழகம் மாவட்டம் வாரியாக முழு விவரம்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாவட்டம் வாரியாக முழு விவரம் வருமாறு