உலக செய்திகள்

பாகிஸ்தானில் சாலை விபத்து; 8 பேர் பலி + "||" + Road accident in Pakistan; 8 killed

பாகிஸ்தானில் சாலை விபத்து; 8 பேர் பலி

பாகிஸ்தானில் சாலை விபத்து; 8 பேர் பலி
பாகிஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாட்டில் ஜீலம் மாவட்டத்தில் காரிப்வால் கிராமத்தில் லாரி ஒன்று வேன் மீது மோதி விபத்திற்குள்ளானது.  இந்த விபத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர்.  பலர் படுகாயமடைந்தனர்.

சிமெண்ட் தொழிற்சாலையில் பணிபுரியம் தொழிலாளர்களை ஏற்றி கொண்டு சென்ற அந்த வேன் விபத்தில் சிக்கியது பற்றிய தகவல் அறிந்து மீட்பு பணி அதிகாரிகள் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றனர்.  அவர்கள் பலியானவர்களின் உடல்களை மீட்டதுடன், காயமடைந்தவர்களை அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுபற்றி அறிந்த பஞ்சாப் முதல் மந்திரி உஸ்மான் பஜ்தார் உயிரிழந்தவர்களுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், நிர்வாகத்திடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படியும் கேட்டு கொண்டார்.