உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.29 கோடியாக உயர்வு


உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.29 கோடியாக உயர்வு
x
தினத்தந்தி 25 Oct 2020 1:09 AM GMT (Updated: 25 Oct 2020 1:09 AM GMT)

ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனாவின் 2-வது அலை பரவத் தொடங்கியுள்ளது.

ஜெனீவா,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா உச்சம் தொட்டுக் குறைந்தது. தற்போது 2-வது அலை பரவத்தொடங்கியதால், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த விழி பிதுங்கி  நிற்கின்றன.  

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை  4 கோடியே 29  லட்சத்து 17 ஆயிரத்து 045 ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 54 ஆயிரத்து 305- ஆக உள்ளது.  தொற்று பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 16 லட்சத்து 59 ஆயிரத்து 984 ஆக உள்ளது. 

Next Story