உலக செய்திகள்

சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார் + "||" + Samsung Chairman Lee Kun-Hee Dies At 78

சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார்

சாம்சங் நிறுவனத்தின் தலைவர்  லீ குன் ஹீ காலமானார்
தென்கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ இன்று காலமானார்.
சியோல், 

உலக அளவில்  மின்னணு சாதன  பொருட்கள் தயாரிப்பில்  முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்று சாம்சங்.தென்கொரியாவை சேர்ந்த இந்த நிறுவனத்தின் தலைவர்  ஆக இருந்த லீ குன் ஹீ உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 78. 

தென்கொரிய நிறுவனத்தை உலக அளவில் ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்றாக கொண்டு சேர்த்த லீ குன் ஹீ, கடந்த 2014- ஆம் ஆண்டு மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு படுத்த படுக்கையாகவே இருந்த அவர் இன்று உயிரிழந்தார்.  

உலகின் 12-வது மிகப்பெரிய பொருளாதார நாடான தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சாம்சங் நிறுவனத்தின் துணை தலைவர் லீ ஜே யோங், கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார்.