சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு 270 மெட்ரிக் டன் உணவு பொருட்கள்; இந்தியா சார்பில் உதவி


சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு 270 மெட்ரிக் டன் உணவு பொருட்கள்; இந்தியா சார்பில் உதவி
x
தினத்தந்தி 27 Oct 2020 12:27 AM GMT (Updated: 27 Oct 2020 12:27 AM GMT)

சூடான் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா சார்பில் அரிசி, கோதுமை மாவு உள்ளிட்ட 270 மெட்ரிக் டன் உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

போர்ட் சூடான்,

ஆப்பிரிக்க நாடுகளில் மக்கள் இயற்கை பேரிடர் மற்றும் கொரோனா பாதிப்பு ஆகியவற்றால் பெரிதும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.  அவர்களுக்கு இந்நேரத்தில் இந்தியா கைகொடுத்துள்ளது.

இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், தேவையான காலகட்டத்தில் உதவி புரியும் இந்திய மரபின்படி, சூடான், தெற்கு சூடான், டிஜிபவுட்டி மற்றும் எரித்ரியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியா சார்பில் அரிசி, கோதுமை மாவு மற்றும் சர்க்கரை உள்ளிட்ட மொத்தம் 270 மெட்ரிக் டன் உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இதற்காக இந்தியாவின் கடற்படை கப்பல் ஐராவத் கடந்த 24ந்தேதி உணவு பொருட்களை சுமந்து கொண்டு புறப்பட்டு சென்றுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Next Story