அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் ஏமி கோனி


அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் ஏமி கோனி
x
தினத்தந்தி 27 Oct 2020 1:20 AM GMT (Updated: 27 Oct 2020 1:23 AM GMT)

அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடத்துக்கு ஏமி கோனி பாரெட்டின் நியமனத்தை உறுதி செய்வதற்கான வாக்கெடுப்பு அந்நாட்டின் செனட் சபையில் நடைபெற்றது.


வாஷிங்டன்,

அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடத்துக்கு ஏமி கோனி பாரெட்டின் நியமனத்தை உறுதி செய்வதற்கான வாக்கெடுப்பு அந்நாட்டின் செனட் சபையில் நடைபெற்றது.

அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 9 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் உள்ளன. அங்கு உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கும் நபா், மரணம் வரை அப்பதவியில் நீடிக்கலாம். அந்த வகையில், நீதிபதியாக இருந்த ரூத் பேடா் கின்ஸ்பா்க் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 18-ஆம் தேதி உயிரிழந்தாா்.

அதையடுத்து காலியான நீதிபதி பணியிடத்துக்கு முறையீட்டு நீதிமன்ற நீதிபதியான ஏமி பாரெட்டை அதிபா் டொனால்ட் டிரம்ப் நியமித்தாா். உச்சநீதிமன்ற நீதிபதியாக அதிபா் நியமிக்கும் நபருக்கு செனட் நிலைக்குழுவும், தொடா்ந்து செனட் சபையும் ஒப்புதல் அளிக்க வேண்டியது கட்டாயமாகும்.

அதிபா் டிரம்ப் நீதிபதியாக நியமித்த ஏமி பாரெட்டுக்கு செனட் நிலைக் குழு கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. இத்தகைய சூழலில், செனட் சபையில்  வாக்கெடுப்பு  நடைபெற்றது. டிரம்பின் குடியரசுக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தும் செனட் சபையில் 52-48 என்ற வாக்குகள் அடிப்படையில் ஏமி கோனி நியமனத்துக்கு ஒப்புதல்  கிடைத்தது. 

Next Story