சவுதி அரேபியாவின் அபா விமான நிலையத்தில் முக்கியமான பகுதியை தாக்கியதாக ஏமன் ஹவுதி குழு அறிவிப்பு


சவுதி அரேபியாவின் அபா விமான நிலையத்தில் முக்கியமான பகுதியை தாக்கியதாக ஏமன் ஹவுதி குழு அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Oct 2020 1:01 PM GMT (Updated: 27 Oct 2020 1:01 PM GMT)

சவுதி அரேபியாவின் அபா விமான நிலையத்தில் முக்கியமான பகுதியை தாக்கியதாக ஏமனின் ஹவுதி குழுவின் இராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

துபாய்

ஏமனின் ஹவுதி குழு ஏவிய வெடிபொருள் நிறைந்த ஆள் இல்லா விமானத்தை தடுத்து நிறுத்தி அழித்ததாக சவுதி தலைமையிலான கூட்டணி அறிவித்த ஒரு நாள் கழித்து சவுதி அரேபியாவின் அபா விமான நிலையத்தில் முக்கியமான பகுதியை தாக்கியதாக ஏமனின் ஹவுதி குழு இவ்வாறு அறிவித்துள்ளது

ஹவுதி கிளர்ச்சியாளர்களும் சவுதி தலைமையிலான கூட்டுப் படைகளும் அண்மையில் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன.ஹவுதிகள் வெடிபொருட்களைக் கொண்ட ஆள் இல்லா விமானங்களை சவுதி அரேபியாவிற்கு அனுப்புகின்றனர், அங்கு அவை சவுதி வான் பாதுகாப்பு அமைப்பால் அழிக்கப்படுகின்றன.

மேலும், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹவுதி பகுதிகளில் சவுதி வான்வழித் தாக்குதல்களை நடத்துகிறது.ஏமனில் நடந்த போரில் 1,10,000 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் கடுமையான மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என ஐக்கிய நாடுகள் சபை வேதனை தெரிவித்துள்ளது.

Next Story