உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.24 கோடியாக உயர்வு


உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.24 கோடியாக உயர்வு
x
தினத்தந்தி 28 Oct 2020 12:25 AM GMT (Updated: 28 Oct 2020 12:25 AM GMT)

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தற்போது 4.42 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜெனீவா,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. 

இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 4,42,21,963 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,24,29,401 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 71 ஆயிரத்து 149 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1,06,21,413 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 79 ஆயிரத்து 772 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா       -  பாதிப்பு - 90,34,232, உயிரிழப்பு - 2,32,014, குணமடைந்தோர் - 58,72,959
இந்தியா       -    பாதிப்பு - 79,88,853, உயிரிழப்பு - 1,20,054, குணமடைந்தோர் - 72,57,194
பிரேசில்       -    பாதிப்பு - 54,40,903, உயிரிழப்பு - 1,57,981, குணமடைந்தோர் -  49,04,046
ரஷியா        -    பாதிப்பு - 15,47,774, உயிரிழப்பு -   26,589, குணமடைந்தோர்  - 11,58,940
பிரான்ஸ்     -     பாதிப்பு -  11,98,695, உயிரிழப்பு -   35,541, குணமடைந்தோர்  - 1,12,716

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

ஸ்பெயின் -11,74,916
அர்ஜென்டினா - 11,16,609
கொலம்பியா - 10,33,218
இங்கிலாந்து -  9,17,575
மெக்சிகோ - 8,95,326
பெரு - 8,92,497
தென்னாப்பிரிக்கா - 7,17,851
ஈரான்- 5,81,824
இத்தாலி - 5,64,778
சிலி- 5,04,525

Next Story