அமெரிக்காவில் 90 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு


அமெரிக்காவில் 90 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 28 Oct 2020 6:40 PM GMT (Updated: 28 Oct 2020 6:40 PM GMT)

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 90 லட்சத்தைக் கடந்துள்ளது.

வாஷிங்டன்,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகளிவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.42 கோடியாக உயர்ந்துள்ளது.

இதில் உலகளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில், மேலும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 90 லட்சத்தைக் கடந்துள்ளது.

மேலும், ஒரே நாளில் 745-க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 31 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 58.58 லட்சத்தை கடந்துள்ளது.

Next Story