‘கோவாக்ஸ்’ அமைப்புக்கு 20 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி வழங்குவதாக சனோபி நிறுவனம் அறிவிப்பு


‘கோவாக்ஸ்’ அமைப்புக்கு 20 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி வழங்குவதாக  சனோபி நிறுவனம் அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Oct 2020 11:31 PM GMT (Updated: 28 Oct 2020 11:31 PM GMT)

‘கோவாக்ஸ்’ அமைப்புக்கு 20 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி வழங்குவதாக சனோபி நிறுவனம் அறிவித்துள்ளது.

லண்டன், 

இங்கிலாந்தை சேர்ந்த சனோபி, ஜி.எஸ்.கே. ஆகிய மருந்து உற்பத்தி நிறுவனங்கள், கொரோனாவுக்கு தடுப்பூசி உருவாக்கும் பணியில் கூட்டாக ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்களின் தடுப்பூசி, 2-ம் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. அதன் முடிவுகள், டிசம்பர் மாதம் வெளியாகிறது.

3-ம் கட்ட பரிசோதனைகள் ஆண்டு இறுதிக்குள் தொடங்கும். அந்த தடுப்பூசிக்கான அங்கீகாரம் கோரி, அடுத்த ஆண்டு முதல் பாதிக்குள் விண்ணப்பிக்கப்படுகிறது.இந்த நிலையில், உலக நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க ‘கோவாக்ஸ்’ அமைப்புக்கு 20 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி வழங்குவதாக இரு நிறுவனங்களும் நேற்று கூட்டாக அறிவித்தன.

Next Story