உலக செய்திகள்

பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை + "||" + Demonised for defending cartoons of the Prophet: President Macron is portrayed as the Devil as Iran and Saudi Arabia wade into blasphemy row and protests break out in Bangladesh

பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை

பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
பிரான்ஸ் ஜனாதிபதியை பத்திரிக்கை ஒன்று பிசாசு என்று சித்தரித்து வெளியாகியுள்ள ஓவியம் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
தெஹ்ரான்

சார்லி ஹேப்டோ பத்திரிக்கையில் வெளிவந்த நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை பள்ளி வகுப்பில் மாணவர்களிடம் காட்டிய பாரிஸ் நகரை சேர்ந்த வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெடி கடந்த 16-ம் தேதி தலைதுண்டித்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர கொலையில் ஈடுபட்டு விட்டு தப்பிக்க முயன்ற ரஷியாவில் உள்ள சிசன்ஸ் பகுதியை பூர்வீகமாக கொண்டு பிரான்சில் வசித்து வந்த 18 வயது இளைஞனை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

அதன்பின் கேலிச்சித்திரங்களை காட்டியதால் தலைதுண்டித்து கொல்லப்பட்ட சாமுவேலின் அஞ்சலி நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் பங்கேற்றார்.

இந்நிலையில், துருக்கி அதிபர் தாயூப் எர்டோகனை விமர்சிக்கும் விதமாக சார்லி ஹேப்டோ பத்திரிக்கை சர்ச்சைக்குரிய வகையில் கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டது. இந்த கேலிச்சித்திரத்திற்கு துருக்கி அதிபர்
எர்டோகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இது ஒரு ’வெறுக்கத்தகு தாக்குதல்’ என்று அவர் விமர்சனம் செய்துள்ளார். 

எர்டோகன் மீதான சார்லி ஹேப்டோவின் கேலிச்சித்திரத்தை கண்டித்தும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேலுக்கு எதிராகவும் துருக்கியில் போராட்டங்கள் நடைபெற்றது.

தற்போது பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானை பத்திரிக்கை ஒன்று பிசாசு என்று சித்தரித்து வெளியாகியுள்ள ஓவியம் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

தற்போது ஈரானைச் சேர்ந்த தின பத்திரிகை ஒன்று, தனது அட்டைப்படத்தில் இம்மானுவல் மேக்ரானனை பிசாசு போன்று சித்தரித்து, (Le démon de Paris) என தலைப்பிட்டுள்ளது.கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி வெளியான ஈரானின் வதன் எம்ரூஸ் பத்திரிகையிலேயே இந்த ஓவியம் வெளியாகியுள்ளது. தற்போது இது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நிலத்துக்கு அடியில் சுரங்கப்பாதை அமைத்து அதிநவீன ஏவுகணைகளை பதுக்கி வைத்திருக்கும் ஈரான்
நிலத்துக்கு அடியில் சுரங்கப்பாதை அமைத்து ஏராளமான அதிநவீன ஏவுகணைகளை வைத்திருக்கும் படத்தை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.
2. இந்திய விவகாரங்களில் சீனா தலையிடுவதை அனுமதிக்கமாட்டோம் -பிரான்ஸ்
இந்திய விவகாரங்களில் சீனா தலையிடுவதை அனுமதிக்கமாட்டோம் என்று பிரான்ஸ் கூறியுள்ளது .
3. ஈரானில் பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பலி
இதற்கு முன் கடந்த 2017-ம் ஆண்டு ஈரானில் அடுத்தடுத்து 2 முறை ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது நினைவு கூரத்தக்கது.
4. பிரான்சில் குடும்ப சண்டையை தடுக்க சென்ற 3 போலீசார் சுட்டுக்கொலை
பிரான்சில் குடும்ப சண்டையை தடுக்க சென்ற 3 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
5. பிரான்ஸ்: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி 5 பேர் பலி; ஒருவர் காயம்
பிரான்சில், ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.