உலக செய்திகள்

அடேங்கப்பா...! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இவ்வளவு செலவா...! + "||" + 2020 US Election Expected To Cost $14 Billion, Most Expensive In History

அடேங்கப்பா...! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இவ்வளவு செலவா...!

அடேங்கப்பா...! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இவ்வளவு செலவா...!
அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல், வரலாற்றிலே மிக அதிக செல்வாகும் தேர்தலாக அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்

அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவதற்கான தேர்தல் வரும் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், ஜனாதிபதி டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில், ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.

இருவரும் காரசாரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏகப்பட்ட வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர்.குறிப்பாக இந்தியர்களின் வாக்குகளைப் பெறுவதற்கு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திலையில், அமெரிக்காவில் தேர்தல் ஆய்வு அமைப்பான, சென்டர் பார் ரெஸ்பான்சிவ் பாலிடிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில், அடுத்த மாதம் நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தல் தான், மிக அதிகமான பணம் செலவழிக்கப்பட்ட தேர்தலாக, தேர்தல் வரலாற்றில் அமைய உள்ளது.

இந்த தேர்தலுக்கு, 80 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது, 1,03,98,50,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என, தெரிய வந்துள்ளது.

கடந்த, 2016-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஏற்பட்ட செலவை விட, இது இரு மடங்கு அதிகம். மேலும், நன்கொடை வாயிலாக, 6,650 கோடி ரூபாய்க்கு மேல் நிதி பெற்ற, முதல் ஜனாதிபதி வேட்பாளராக, ஜோ பிடன் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: அரிசோனா, விஸ்கான்சின் மாகாணங்களில் ஜோ பைடன் வெற்றியாளராக சான்று
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், அரிசோனா, விஸ்கான்சின் மாகாணங்களில் ஜோ பைடன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
2. ஜோ பைடன் அரிசோனா - ஜார்ஜியா மாநிலங்களை கைப்பற்றினார்; வாக்கு எண்ணிக்கை 306 ஆக உயர்வு
ஜோ பைடன் அரிசோனா மற்றும் ஜார்ஜியா மாநிலங்களை கைப்பற்றி உள்ளார். அவரது வாக்கு எண்ணிக்கை 306 ஆக உயர்ந்தது. டிரம்ப் 232 வாக்கு எண்ணிக்கையில் உள்ளார்.
3. ஜனவரி 20 க்குப் பிறகு வேறு நிர்வாகம்... தோல்வியை சூசகமாக ஒப்புக்கொண்ட டொனால்டு டிரம்ப்...?
ஜனவரி 20 க்குப் பிறகு அவர் அதிபராக இருக்க மாட்டார் என்பதை சூசமாக தெரிவித்து தனது தோல்வியை ஒப்புக்கொள்ள டொனால்டு டிரம்ப் நெருங்கி உள்ளார்.
4. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது வெட்கக்கேடானது - ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வி அடைந்ததை டிரம்ப் ஏற்க மறுப்பது வெட்கக்கேடானது என ஜோ பைடன் விமர்சித்தார்.
5. தேர்தல் முடிவுகளுக்கு முன் டிரம்ப் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளை நீக்கி விசுவாசிகளை நியமித்தார்
தேர்தல் முடிவுகளுக்கு முன் டிரம்ப் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளை நீக்கி தனது விசுவாசிகளை நியமித்து உள்ளார். இதனால் பென்டகன் அதிகாரிகளிடையே எச்சரிக்கை உணர்வை தூண்டி உள்ளது.