உலக செய்திகள்

நைஸ் தேவலாய தாக்குதல்: இஸ்லாமியர்கள் கோபத்தை காட்ட உரிமை உள்ளது - மலேசிய முன்னாள் பிரதமர் + "||" + Ex-Malaysian PM Mohamad says Muslims have right to ‘kill French’, slams ‘primitive’ Macron

நைஸ் தேவலாய தாக்குதல்: இஸ்லாமியர்கள் கோபத்தை காட்ட உரிமை உள்ளது - மலேசிய முன்னாள் பிரதமர்

நைஸ் தேவலாய தாக்குதல்: இஸ்லாமியர்கள் கோபத்தை காட்ட உரிமை உள்ளது - மலேசிய முன்னாள் பிரதமர்
வரலாற்றில் பல முஸ்லிம்களை கொன்ற நாடு பிரான்ஸ். தற்போது இஸ்லாமியர்கள் அவர்களின் கோபத்தை காட்ட உரிமை உள்ளது என்று மகாதீர் முகம்மது தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
கோலாலம்பூர்

இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகத்தை இழிவாக சித்தரிக்கும் கேலிச்சித்திரத்தை காண்பித்த ஆசிரியரை சில தினங்களுக்கு முன்பு ஒரு பள்ளி மாணவரால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதை தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்ட மகாதீர், வெவ்வேறு கலாசாரத்தையும் மதிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தன்னுடைய மேற்கத்திய நடைமுறை, மதிப்புகள், வழக்கத்ததை திணிக்க முற்படக்கூடாது என்றும் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கை குறிப்பிட்டு மகாதீர் முகம்மது கடுமையாக சாடினார்.

அவர் பதிவிட்ட 13க்கும் அதிகமான டுவிட்டுகளில் சில விதி மீறல் பதிவு எனக்கூறி டுவிட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது.

அவரது கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் நூற்றுக்கணக்கில் டுவிட்டர் பயனர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழையத் தடை
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால் இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
2. பத்து மடங்கு அதிகம் பரவும் தன்மை உடைய வைரசாக கொரோனா புதிய மரபணு மாற்றம் அதிர்ச்சி தகவல்
பத்து மடங்கு அதிகம் பரவும் தன்மை உடைய வைரசாக கொரோனாவைரஸ் புதிய மரபணு மாற்றம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.