உலக செய்திகள்

துருக்கி, கிரீஸ் நாடுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு ; 419க்கு மேற்பட்டோர் காயம் என தகவல் + "||" + Powerful earthquake jolts Turkey and Greece, killing at least fourteen

துருக்கி, கிரீஸ் நாடுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு ; 419க்கு மேற்பட்டோர் காயம் என தகவல்

துருக்கி, கிரீஸ் நாடுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு ; 419க்கு மேற்பட்டோர் காயம் என தகவல்
துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்பு சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது.
இஸ்தான்புல்,

துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 எனப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்பு சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது. 

இங்கு 20-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து முற்றிலும் சேதடைந்தன. கட்டிட இடிபாட்டிற்குள் பலர் சிக்கியிருக்கலாம் எனவும், முதற்கட்டமாக 14 பேர் உயிரிழந்ததாகவும், 419 பேர் காயம் அடைந்ததாகவும் துருக்கி அரசு தெரிவித்துள்ளது.

கட்டிட இடிபாட்டிற்குள் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர். கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் தெரியவில்லை.

துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் நகரத்துக்குள் புகுந்ததாக அங்கு இருந்தவர்கள் தெரிவித்தனர். இது ஒரு மினி சுனாமி என்று அச்சத்துடன் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மருத்துவமனையில் தீ விபத்து: கொரோனா நோயாளிகள் 9 பேர் உயிரிழப்பு
துருக்கியில் மருத்துவமனையில் சிக்கி ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் உயிரிழந்தனர்.
2. துருக்கியில் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு புதிய உச்சம்: ஒரே நாளில் 3,116 பேருக்கு கொரோனா
துருக்கியில் கடந்த 24 ஏப்ரல் 24-க்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் புதிய உச்சமாக நேற்று 3,116 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. துருக்கி நிலநடுக்கம்: 91 மணி நேரத்திற்கு பிறகு 4-வயது சிறுமி உயிருடன் மீட்பு !
துருக்கியில் கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
4. துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்- சுனாமியும் ஏற்பட்டதாக தகவல்
துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.
5. துருக்கி பொருட்களை புறக்கணிக்க சவுதி அரேபியா முடிவு
துருக்கி பொருட்களை புறக்கணிக்க சவுதிஅரேபியா முடிவு செய்துள்ளதால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் மோசமடைந்துள்ளது.