அமெரிக்கா தேர்தல்: வரும் வாரம் பேஸ்புக்கிற்கு சோதனையான காலகட்டம் - மார்க் ஸுக்கர்பெர்க்


அமெரிக்கா தேர்தல்: வரும் வாரம் பேஸ்புக்கிற்கு சோதனையான காலகட்டம் - மார்க் ஸுக்கர்பெர்க்
x
தினத்தந்தி 30 Oct 2020 9:45 PM GMT (Updated: 30 Oct 2020 9:30 PM GMT)

அமெரிக்கா தேர்தலையொட்டி வரும் வாரம் பேஸ்புக்கிற்கு சோதனையான காலகட்டம் என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க் கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவதற்கான தேர்தல் வரும் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், ஜனாதிபதி டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில், ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.

இருவரும் காரசாரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏகப்பட்ட வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர்.குறிப்பாக இந்தியர்களின் வாக்குகளைப் பெறுவதற்கு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்கா தற்போது பிளவுபட்டு நிற்பதால் உள்நாட்டு அமைதியின்மை ஏற்படும் அபாயம் இருப்பதாக பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸுக்கர்பெர்க் கூறியுள்ளார்.

தேர்தல் நாளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் வன்முறை வெடிக்கலாம் என எச்சரித்துள்ள மார்க், சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் இடம் பெறுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார். வரும் வாரம் பேஸ்புக்கிற்கு சோதனையான காலகட்டம் என்று கூறியுள்ள மார்க், தாங்கள் புதிய அச்சுறுத்தல்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அதே சமயம் ஜனநாயக ஒருமைப்பாட்டையும், மக்களின் உரிமையையும் காக்க போராடுவோம் என்றும் மார்க் ஸுக்கர்பெர்க் கூறியுள்ளார்.

Next Story