2வது கொரோனா ஊரடங்கு: பாரிஸ் மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறியதால் 700 கி.மீ.க்கு வாகன நெரிசல்


2வது கொரோனா ஊரடங்கு: பாரிஸ் மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறியதால் 700 கி.மீ.க்கு வாகன நெரிசல்
x
தினத்தந்தி 31 Oct 2020 7:38 AM GMT (Updated: 31 Oct 2020 7:50 AM GMT)

2வது கொரோனா ஊரடங்கு காரணமாக, பாரிஸ் மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சொந்த ஊர்களுக்கு வெளியேறியதால் 700 கி.மீட்டருக்கு வாகன நெரிசல் ஏற்பட்டது.

பாரிஸ், 

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரசின் 2-வது அலை பரவ தொடங்கி உள்ளது. குறிப்பாக பிரான்சில் கொரோனா வைரஸ் உச்சத்தில் உள்ளது. பிரான்ஸ் நாட்டில் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்து 31 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அந்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 565 ஆக அதிகரித்துள்ளது 

இந்நிலையில், பிரான்சில் தற்போது கொரோனா பாதிப்பின், 2வது அலை தொடங்கி உள்ளதால், அங்கு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிமான தேவைகள் மற்றும் அவசர மருத்துவ பணிகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

பிரான்ஸ் அரசின் இந்த திடீர் ஊரடங்கு அறிவிப்பால் பாரிஸ் நகரத்தை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊருக்கு ஒரே நேரத்தில் செல்ல முற்பட்டதால் வாகனங்கள் அங்கு அணிவகுத்து நின்றன. சுமார் 700 கி.மீட்டர் தூரத்துக்கு இந்த வாகன நெரிசல் இருந்தது. இதனால் அங்கு பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாயினர்.

Next Story