உலக செய்திகள்

உளறி கொட்டும் இவர், இன்னும் சில மணி நேரத்தில் உங்கள் அதிபராகலாம் - இங்கிலாந்து பத்திரிகை கிண்டல் + "||" + 'This is my son, Beau, who a lot of you helped elect to the Senate': Joe confuses his two granddaughters and then introduces one of them as his dead son - and he could be your President in HOURS...

உளறி கொட்டும் இவர், இன்னும் சில மணி நேரத்தில் உங்கள் அதிபராகலாம் - இங்கிலாந்து பத்திரிகை கிண்டல்

உளறி கொட்டும் இவர், இன்னும் சில மணி நேரத்தில் உங்கள் அதிபராகலாம் - இங்கிலாந்து பத்திரிகை கிண்டல்
பேத்தியை, இவர்தான் என்னுடைய மகன் என தவறாக அடையாளம் காட்டும் இவர், இன்னும் சில மணி நேரத்தில் உங்கள் அதிபராகலாம் ஜோ பிடன் குறித்து இங்கிலாந்து பத்திரிகை கிண்டல்
லண்டன்

அடுத்த அமெரிக்க அதிபராகும் வாய்ப்புள்ள ஜோ பைடன் பேசும்போது தடுமாறுவதுண்டு... அது முதுமை காரணமாக இருக்கலாம். என்றாலும், சில நேரங்களில் அவர் செய்யும் சொதப்பல்களை அழகாக வீடியோவாக எடுத்து ஊடகங்கள் வெளியிட்டு விடுவதுண்டு.

அப்படி நேற்று ஜோ பிடன் செய்த ஒரு சொதப்பல் வீடியோ வெளியாகியுள்ளது. இதோ, இவர்தான் எனது மகன் பியூ பிடன் என்று கூறி, ஒரு பெண்ணை தன் ஆதரவாளர்களுக்கு அறிமுகம் செய்தார் ஜோ. பிடன் இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஜோவின் மகன் பியூ பிடன் 2015ஆம் ஆண்டே இறந்துபோய்விட்டார்.ஒரு வேளை, இவர்தான் பியூ பிடனின் மகள் என்று சொல்வதற்கு பதிலாக, பியூ பிடன் என்று மாற்றி சொல்லிவிட்டாரா என்று பார்த்தால், அந்த பெண்பியூ பிடன் மகளும் இல்லை.

அப்புறம், இல்லை இது என் பேத்தி நடாலி என்றார், ஆனால் அது நடாலியும் இல்லை, அது ஜோவின் இன்னொரு மகனான ஹண்டரின் மகள் பின்னேகன்(20). கடைசியாக, ஒரு வழியாக, பொறுங்கள், தப்பான ஆளை காட்டிவிட்டேன், இதுதான் நடாலி, என் மகன் பியூ பிடனின் மகள் என்றார் ஜோ.இதேபோல், தேர்தல் பிரச்சாரத்தின்போதும் பலமுறை உளறிக்கொட்டினார் ஜோ. பேத்தியை, இவர்தான் என்னுடைய மகன் என தவறாக அடையாளம் காட்டும் இவர், இன்னும் சில மணி நேரத்தில் உங்கள் அதிபராகலாம் என கிண்டல் செய்துள்ளது டெ டெய்லி மெயில் பத்திரிகை

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையீடு; ரஷியா மீது புதிய பொருளாதார தடைகள் விதிப்பு; அமெரிக்கா அதிரடி
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட்ட விவகாரம் தொடர்பாக ரஷியா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
2. புதின் ஒரு கொலையாளி , அமெரிக்க தேர்தல் தலையீடுக்கு தக்க விலை கொடுப்பார்- அமெரிக்க ஜனாதிபதி ஆவேசம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தன்னை தோற்கடிக்க முயன்றவர் என்றும் கொலையாளி என்றும் ரசிய அதிபரை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விமர்சித்ததை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது.
3. அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பு விழா தொடங்கியது; முதல் நாளிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 15 உத்தரவுகள் கையொழுத்தாகிறது.
ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்ற முதல் நாளிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 15 முக்கிய உத்தரவுகளில் கையொழுத்திட உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
4. கடந்த 10 ஆண்டுகளில் எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்காத ஜனாதிபதி நான்தான் - பிரிவு உபசார விழாவில் டொனால்டு டிரம்ப் பேச்சு
கடந்த 10 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிகளில் எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்காத ஜனாதிபதி நான்தான் என பிரிவு உபசார விழாவில் டொனால்டு டிரம்ப் பேசினார்.
5. 150 ஆண்டு கால அமெரிக்க வரலாற்றில் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பை புறக்கணிக்கும் முதல் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்
அமெரிக்க புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் தான் பங்கேற்கப் போவதில்லை என டிரம்ப் அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.