உலக செய்திகள்

அமெரிக்க தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் இழுபறி மாகாணங்கள் + "||" + The tug-of-war provinces that determine victory in the US election

அமெரிக்க தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் இழுபறி மாகாணங்கள்

அமெரிக்க தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் இழுபறி மாகாணங்கள்
அமெரிக்க தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் இழுபறி மாகாணங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
வாஷிங்டன், 

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தற்பொது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதிபரை தேர்வு செய்ய அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாநிலங்களில் 538 தேர்வாளர்கள் (பிரதிநிதிகள்) உள்ளனர். இவர்களில் 270 பேரின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அமெரிக்க அதிபராக தேர்வாக முடியும். 

தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 236 வாக்குகளும், குடியரசு கட்சி வேடபாளர் டிரம்ப் 213 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஜோ பைடன் முன்னிலை பெற்றிருந்தாலும், இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் குறைந்த அளவிலேயே உள்ளது. 

இந்நிலையில் அமெரிக்க தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் இழுபறி மாகாணங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

அதில் அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்ஸில்வேனியா, விஸ்காஸின் மாகாணங்களில் இழுபறி நிலவுகிறது. இதன்படி மொத்தம் 7 மாகாணங்களில் முடிவுகள் இழுபறியில் உள்ளன. இழுபறியில் உள்ள அரிசோனா, நெவாடா ஆகிய 2 மாகாணங்களில் பைடன் முன்னிலை பெற்றுள்ளார். மேலும் இழுபறியில் உள்ள ஜார்ஜியா, மிச்சிகன், வட கரோலினா, பென்ஸில்வேனியா, விஸ்காஸின் ஆகிய 5 மாகாணங்களில் டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி
வானில் எதிரியின் இலக்கை அழிக்கும் இந்தியாவின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றிபெற்றது.
2. இந்தியாவின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி
இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது.
3. பீகார் மாநில முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் இன்று பதவி ஏற்பு தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சி அமைக்கிறார்
பீகாரில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில், 243 இடங்களைக்கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது.
4. ஆர்.ஆர்.நகர், சிரா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி
கர்நாடக சட்டசபையில் காலியாக இருந்த ஆர்.ஆர்.நகர், சிரா ஆகிய 2 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகள் வசம் இருந்த இந்த இரண்டு தொகுதிகளையும் பா.ஜனதா கைப்பற்றியது.
5. அமெரிக்க தேர்தல் தரவுகளை ஈரானியர்கள் ஹேக் செய்வதாக அமெரிக்க குற்றச்சாட்டு
அமெரிக்க தேர்தல் தரவுகளை ஈரானியர்கள் ஹேக் செய்வதாக அமெரிக்க உளவு அமைப்புகள் குற்றஞ்சாட்டி உள்ளன.