உலக செய்திகள்

கொரோனா சிகிச்சைக்கு ஆஸ்பிரின் மருந்து; ஆய்வு மேற்கொள்ள பிரிட்டன் முடிவு + "||" + Aspirin for corona treatment; Britain decides to undertake research

கொரோனா சிகிச்சைக்கு ஆஸ்பிரின் மருந்து; ஆய்வு மேற்கொள்ள பிரிட்டன் முடிவு

கொரோனா சிகிச்சைக்கு ஆஸ்பிரின் மருந்து; ஆய்வு மேற்கொள்ள பிரிட்டன் முடிவு
கொரோனா சிகிச்சைக்கு ஆஸ்பிரின் வலி நிவாரணி மருந்து பொருட்களை பயன்படுத்துவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள பிரிட்டன் முடிவு செய்துள்ளது.
லண்டன்,

கொரோனா பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் செயல்பட்டு வருகின்றன.  இவற்றில் பிரிட்டனும் ஒன்று.

அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனை முயற்சியாக, ஆஸ்பிரின் என்ற வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் மருந்துகளை கொரோனா பாதிப்பு சிகிச்சைக்கு பயன்படுத்துவது பற்றி ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

ஆஸ்பிரின் மருந்துகள், ஒருவரது ரத்தம் கெட்டிப்படுவதில் இருந்து விடுவித்து ரத்தம் மென்மையாக மாறுவதற்கான பணியை மேற்கொள்கிறது.  கொரோனா பாதிப்புகளுக்கு ஆளாகும் நபர்களுக்கு இரத்த அடைப்பு ஏற்பட கூடிய ஆபத்து உள்ளது.  அதனால், அவர்களது உடலில் ரத்தம் முடிச்சுகளாக சேருவதில் இருந்து விடுவிக்கும் பணியை மேற்கொள்ள இந்த மருந்துகளை பயன்படுத்தலாம் என கண்டறிந்துள்ளனர்.

இதுபற்றி பரிசோதனை ஆய்வாளர்களில் துணை தலைவராக உள்ள பீட்டர் ஹார்பி என்பவர் கூறும்பொழுது, இந்த மருந்து (ஆஸ்பிரின்) பலன் அளிக்கும் என நம்புவதில் தெளிவான நிலை காணப்படுகிறது.  இது பாதுகாப்பு நிறைந்தது.  விலையும் அதிகமில்லை.  எளிதில் கிடைக்க கூடியது என கூறுகிறார்.

இதனை தொடர்ந்து, பரிசோதனை முயற்சியாக நாள் ஒன்றுக்கு 150 மி.கிராம் ஆஸ்பிரினை குறைந்தது 2 ஆயிரம் நோயாளிகளுக்கு வழங்கி சோதனை செய்ய உள்ளனர்.  அவர்களிடம் பெறப்படும் தரவுகளை கொண்டு, பிற முறைகளில் கொரோனா பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  எனினும் அதிகப்படியான அளவில் இந்த மருந்துகளை எடுத்து கொள்வது உடல் நலனுக்கு ஆபத்து என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சுப்ரீம் கோர்ட்டின் 50% பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு; நீதிபதிகள் வீட்டில் இருந்து பணியாற்ற முடிவு
சுப்ரீம் கோர்ட்டின் 50% பணியாளர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு நீதிபதிகள் வீட்டில் இருந்து பணிபுரிய இருக்கின்றனர்.
2. கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை
கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
3. கொரோனா தொற்றால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா வீடு திரும்பினார்
கொரோனா தொற்றால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா குணமடைந்து வீடு திரும்பினார்.
4. கொரோனா விதிமீறல்; மும்பை விமான நிலைய பயணிகளுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்க முடிவு
மராட்டியத்தில் மும்பை விமான நிலையத்தில் கொரோனா விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
5. குமரியில் 86 பேருக்கு கொரோனா சிகிச்சை
குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 86 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.