அமெரிக்க அதிபர் தேர்தல்; ஜார்ஜியா உள்ளிட்ட 2 மாநிலங்களில் பைடன் முன்னிலை


அமெரிக்க அதிபர் தேர்தல்; ஜார்ஜியா உள்ளிட்ட 2 மாநிலங்களில் பைடன் முன்னிலை
x
தினத்தந்தி 6 Nov 2020 2:46 PM GMT (Updated: 6 Nov 2020 2:46 PM GMT)

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியை முடிவு செய்யும் ஜார்ஜியா உள்ளிட்ட 2 மாநிலங்களில் பைடன் முன்னிலை பெற்றுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று காலை நிலவரப்படி, பைடன் 264 தேர்தல் வாக்குகளையும், டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளார். பைடனுக்கு 50.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், சமீபத்திய கணிப்புகளின்படி டிரம்பிற்கு 48.3 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.
 
அமெரிக்க தேர்தலின் இறுதி முடிவு அலாஸ்கா (3), ஜார்ஜியா (16), நெவாடா (6), வட கரோலினா (15) மற்றும் பென்சில்வேனியா (20 தேர்தல் கல்லூரி வாக்குகள்) ஆகிய 5 மாநிலங்களின் முடிவுகளை பொறுத்தது.

அதிபர் பதவியை தீர்மானிக்கக்கூடிய ஒரு சில மாநிலங்களில், மூன்று மாநிலங்களிலும் வாக்குகள் இன்னும் கணக்கிடப்படுகின்றன. ஜோ பைடன் நெவாடா மற்றும் அரிசோனாவில்  ஒரு சிறிய முன்னிலையில் உள்ளார். ஜார்ஜியாவில் டிரம்ப் ஒரு சிறிய முன்னிலையில் உள்ளார், மற்றும் மிச்சிகனில் பைடன் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை இந்த வார இறுதிக்குள் அறிவிக்க வாய்ப்புகள் இல்லை என வாஷிங்டனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த தேர்தலில் சமீபத்திய நிலவரப்படி,  வெற்றியை முடிவு செய்ய கூடிய ஜார்ஜியா மற்றும் பென்சில்வேனியா ஆகிய 2 மாநிலங்களில் பைடன் முன்னிலை பெற்றுள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  இதனால், அதிபர் தேர்தலில் வெற்றியை நோக்கி பைடன் நெருங்கியுள்ளார்.

Next Story