நாம் சாதித்து விட்டோம்: ஜோ பைடனுடன் கமலா ஹாரிஸ் உரையாடல்


நாம் சாதித்து விட்டோம்: ஜோ பைடனுடன் கமலா ஹாரிஸ் உரையாடல்
x
தினத்தந்தி 8 Nov 2020 1:18 AM GMT (Updated: 8 Nov 2020 1:18 AM GMT)

அமெரிக்க அதிபர் தேர்தலில் 4 நாளாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது. ஜோ பைடன் வெற்றி பெற்றார். கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது.  நான்கு நாட்களாக வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. தேர்தலில் பின் தங்க துவங்கியதும், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டினார். இந்த சூழலில் தற்போது ஜோ பைடன் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்துள்ளார். 

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270- தேர்தல்  வாக்குகள் பெற வேண்டும்.இன்று காலை 7 மணியளவில் ( இந்திய நேரப்படி) அமெரிக்காவின் பிரபலமான வாஷிங்டன் போஸ்ட் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியின் படி, ஜோ பைடன் 279 தேர்தல் வாக்குகளையும் டிரம்ப் 214-தேர்தல் வாக்குகள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜோ பைடன் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பிரதமர் மோடி உள்பட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

இந்நிலையில், துணை அதிபராக தேர்வு செய்யப்பட இருக்கும் கமலா ஹாரிஸ்,  ஜோ பைடனுடன் தொலைபேசியில்  தேர்தல் வெற்றி குறித்து பேசியுள்ளார். அப்போது, ”நாம் சாதித்துவிட்டோம், நீங்கள் அமெரிக்காவின் அடுத்த அதிபராகப்  போகிறீர்கள்” எனக்கூறுகிறார். இந்த உரையாடலை கமலா ஹாரிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. 


Next Story