உலக செய்திகள்

முகமது நபி கார்ட்டூன் விவகாரம்: இஸ்லாம் மீதான மரியாதையை பிரான்ஸ் உறுதிப்படுத்தியது + "||" + France affirms respect for Islam in dispute over cartoons

முகமது நபி கார்ட்டூன் விவகாரம்: இஸ்லாம் மீதான மரியாதையை பிரான்ஸ் உறுதிப்படுத்தியது

முகமது நபி கார்ட்டூன் விவகாரம்: இஸ்லாம் மீதான மரியாதையை பிரான்ஸ் உறுதிப்படுத்தியது
முகமது நபி கார்ட்டூன்கள் தொடர்பான தகராறில் இஸ்லாம் மீதான மரியாதையை பிரான்ஸ் உறுதிப்படுத்தி உள்ளது
பாரீஸ்

முகமது நபியின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் காட்டிய காரணத்திற்காக பிரான்சில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி ஆசிரியர் ஒருவர் தலை வெட்டி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக  அதிபர் மேக்ரோன் தெரிவித்த கருத்துக்கு மத்திய கிழக்கு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

முகமது நபியின் கேலிச்சித்திரத்தை காண்பிக்கும் உரிமை குறித்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.

பிரான்ஸ் அதிபரின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான், வங்காள தேசம் லிபியா, சிரியா, காசாவில் போராட்டங்கள் நடைபெற்றன. குவைத், ஜோர்டான் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பொருட்களை புறக்கணிக்கும் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்கும் முடிவை மத்திய கிழக்கு நாடுகள் கைவிட வேண்டுமென்று பிரான்ஸ் அரசு வலியுறுத்தியது.

பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்கும் "அடிப்படை அற்ற" அழைப்புகள் "ஒரு தீவிர சிறுபான்மை குழுவால் மேற்கொள்ளப்படுவதாக" பிரான்சின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

நபிகள் நாயகத்தை சித்தரிக்கும் கார்ட்டூன்கள் விவகாரத்தில் பிரான்ஸ் நாடு இஸ்லாத்திற்கு ஆழ்ந்த மரியாதை அளிப்பதாக  உறுதிப்படுத்தியது.

எகிப்திய ஜனாதிபதி அப்துல் பத்தா அல் சிசி மற்றும் வெளியுறவு மந்திரி சமே ஷவுக்ரி ஆகியோரை சந்தித்த பின்னர்,பிரெஞ்சு வெளியுறவு மந்திரி ஜீன்-யவ்ஸ் லு ட்ரையன் கூறும் போது ' எங்களுக்கு முதல் கொள்கை  இஸ்லாத்திற்கு மிக உயர்ந்த மரியாதை அளிப்பது. பிரான்சில் முஸ்லிம்கள் சமூகத்தின் ஒரு அங்கம் என்பதையும் நான் கூற விரும்புகிறேன். ''

இரண்டாவது செய்தி என்னவென்றால், எங்கள் மண்ணில் மட்டுமல்லாமல் மற்ற இடங்களிலும் ஒரு பயங்கரவாத அச்சுறுத்தல், வெறித்தனம் ஆகியவற்றை நாம் எதிர்கொள்கிறோம், இந்த போர் ஒரு பொதுவான யுத்தமாகும், 

முஸ்லீம் உலகில் ஒரு "பிரெஞ்சு எதிர்ப்பு" பிரச்சாரம் பெரும்பாலும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோனின் கருத்துக்களை தவறாக புரிந்து கொண்டதன் விளைவாக இருந்தது என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்திய விவகாரங்களில் சீனா தலையிடுவதை அனுமதிக்கமாட்டோம் -பிரான்ஸ்
இந்திய விவகாரங்களில் சீனா தலையிடுவதை அனுமதிக்கமாட்டோம் என்று பிரான்ஸ் கூறியுள்ளது .
2. பிரான்சில் குடும்ப சண்டையை தடுக்க சென்ற 3 போலீசார் சுட்டுக்கொலை
பிரான்சில் குடும்ப சண்டையை தடுக்க சென்ற 3 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
3. பிரான்ஸ்: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி 5 பேர் பலி; ஒருவர் காயம்
பிரான்சில், ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
4. பிரான்சில் 300 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் 70 வயது டாக்டருக்கு சிறைத்தண்டனை
பிரான்சில் 300 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் 70 வயது டாக்டருக்கு அதிகபட்ச சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
5. பிரான்ஸ் நாட்டில் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் - பிரதமர் ஜீன் காஸ்டெஸ் அறிவிப்பு
பிரான்ஸ் நாட்டில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெஸ் அறிவித்துள்ளார்.