உலக செய்திகள்

கொரோனா தொற்று; கடந்த 24 மணிநேரத்தில் 10 ஆயிரம் கடந்த பலி எண்ணிக்கை + "||" + Corona infection; 10 thousand last casualties in the last 24 hours

கொரோனா தொற்று; கடந்த 24 மணிநேரத்தில் 10 ஆயிரம் கடந்த பலி எண்ணிக்கை

கொரோனா தொற்று; கடந்த 24 மணிநேரத்தில் 10 ஆயிரம் கடந்த பலி எண்ணிக்கை
உலக அளவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரம் கடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
வாஷிங்டன்,

உலகம் முழுவதும் கொரோனா வைரசின் அச்சுறுத்தலால் பல்வேறு நாடுகளும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.  இந்த நிலையில், குளிர்காலத்தில் கொரோனா வைரசின் 2வது அலை பாதிப்பு ஏற்படுத்த கூடும் என நிபுணர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் 2வது அலை பாதிப்பு ஏற்படுத்த தொடங்கி விட்டது.  இந்த சூழலில் உலக அளவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 10 ஆக பதிவாகி உள்ளது.

கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவ தொடங்கிய காலகட்டத்தில் இருந்து இதுவரை, நாளொன்றுக்கு 10 ஆயிரம் என்ற பலி எண்ணிக்கையை முதன்முறையாக கடந்துள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தொற்று: சுந்தர்.சி உடல்நிலை குறித்து குஷ்பு பதிவு
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் பரவி வருகிறது. நடிகர், நடிகைகளும் இந்த வைரஸ் தொற்றில் சிக்குகிறார்கள்.
2. கொரோனா தொற்று 2-வது அலை எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வரத்து படிப்படியாக குறைவு ஒரே நாளில் 18 விமானங்கள் ரத்து
கொரோனா தொற்று 2-வது அலை எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
3. மேலும் 9 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்குவார்க்கு கொரோனா
மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்குவார்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா தொற்று; சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது.