லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது- ஒருவர் பலி


லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது- ஒருவர் பலி
x
தினத்தந்தி 13 Nov 2020 9:53 AM GMT (Updated: 13 Nov 2020 9:53 AM GMT)

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கிலுள்ள சிறிய விமானத் தளத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

கலிபோர்னியா விமான நிலையத்திற்கு அருகேயுள்ள வைட்மேன் என்ற சிறிய விமானத் தளத்தில், ஓற்றை ஓடுதளத்தில் விமானம் ஒன்று தரையிறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானம் தீப்பிடித்து எரிந்து சுக்குநூறாக நொறுங்கியது. 

இதில் இப்பகுதியில் நின்ற கார்களும், அருகிலுள்ள ஒரு வீட்டின் முன்பகுதி புல்வெளியும் தீப்பிடித்து எரிந்தது. அந்த பகுதி வழியாக சென்ற மின்வயர்களும்  விமான விபத்தில் துண்டிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர்.  விமானத்தில் விமானி மட்டுமே பயணம் செய்ததாகவும்,  விபத்தில் அவர் பலியாகிவிட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. 


Next Story