உலக செய்திகள்

அமெரிக்காவில் மருத்துவமனையில் குண்டுவெடிப்பு; 2 பேர் பலி + "||" + Hospital bombing in the US; 2 people were killed

அமெரிக்காவில் மருத்துவமனையில் குண்டுவெடிப்பு; 2 பேர் பலி

அமெரிக்காவில் மருத்துவமனையில் குண்டுவெடிப்பு; 2 பேர் பலி
அமெரிக்காவில் மருத்துவமனை ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
வாஷிங்டன்,

அமெரிக்காவின் கிழக்கில் கனெக்டிகட் மாநிலத்தில் முதியவர்களுக்கான மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில், இதில் திடீரென குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

இதுபற்றி மருத்துவமனையில் சுகாதார நல அமைப்பு வெளியிட்டு உள்ள செய்தியில், மேற்கு வளாகத்தில் நோயாளிகள் இல்லாத பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்து உள்ளது.  இதில் 2 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

அவர்களில் ஒருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் அல்ல.  நோயாளிகளுக்கான நலன் சார்ந்த சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 19 ஆண்டுகளுக்கு பின் தந்தையாக இருந்த வீரர் நக்சலைட்டு தாக்குதலில் பலியான சோகம்
திருமணம் நடந்து 19 ஆண்டுகளுக்கு பின் தந்தையாக இருந்த வீரர் நக்சலைட்டு தாக்குதலில் பலியான சோகம் நடந்துள்ளது.
2. கினியாவில் ராணுவ தளத்தில் குண்டுவெடிப்பு; 17 பேர் உயிரிழப்பு
கினியா நாட்டில் ராணுவ தளத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான குண்டுவெடிப்பு சம்பவங்களில் 17 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.