உலக செய்திகள்

கலவரமாக மாறிய வாக்குவாதம் : 2 பேர் உயிரிழப்பு போலீஸ் குவிப்பு + "||" + clash between two families in Sri Lanka

கலவரமாக மாறிய வாக்குவாதம் : 2 பேர் உயிரிழப்பு போலீஸ் குவிப்பு

கலவரமாக மாறிய வாக்குவாதம் : 2 பேர் உயிரிழப்பு   போலீஸ் குவிப்பு
இலங்கையில், இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், மோதலாக மாறியதில், 2 பேர் உயிரிழந்தனர்.
இலங்கையில், யாழ்ப்பாணம், குடாக்கனை பகுதியில் வசித்து வரும் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. பின்னர் பிரச்சினை கலவரமாக மாறியதை தொடர்ந்து இரண்டு குழுக்கள் ஒருவரை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிக் கொண்டனர்,

அப்போது படுகாயம் அடைந்த செல்வம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,. அதேபோல் தேவராசா என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வட்டுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் துப்பாக்கி ஏந்திய போலீசார், பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை இந்தியா, ஜப்பானுக்கு வழங்க இலங்கை சம்மதம்
கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கன்டெய்னர் முனையம் அமைக்கும் ஒப்பந்தத்தை மீண்டும் இந்தியா, ஜப்பானுக்கு வழங்க இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது.
2. பாதுகாப்பு துறையில் ‘இலங்கை, எங்களின் முதல் முன்னுரிமை கூட்டாளி’ இந்தியா சொல்கிறது
பாதுகாப்பு துறையில் இலங்கை எங்களின் முதல் முன்னுரிமை கூட்டாளி என்று இந்தியா கூறுகிறது.
3. இலங்கை, நேபாளத்திலும் ஆட்சியமைக்க பா.ஜனதா விரும்புகிறது; திரிபுரா முதல்-மந்திரி பேச்சால் சர்ச்சை
இந்திய மாநிலங்களில் மட்டுமல்ல இலங்கை, நேபாளத்திலும் ஆட்சியமைக்க பா.ஜனதா விரும்புகிறது என திரிபுரா முதல் மந்திரி பேசியுள்ளார்.
4. உருமாறிய கொரோனா தொற்று இலங்கையிலும் கண்டுபிடிப்பு
இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் இலங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
5. இலங்கையில் காதலர் தினம் கொண்டாட தடை - காவல்துறை எச்சரிக்கை
இலங்கையில் காதலர் தினம் கொண்டாட்டங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.