அமெரிக்காவில் உளவு அமைப்பு அதிகாரிகள் 130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


அமெரிக்காவில் உளவு அமைப்பு அதிகாரிகள் 130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 14 Nov 2020 7:51 PM GMT (Updated: 14 Nov 2020 7:51 PM GMT)

அமெரிக்க அதிபர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 130க்கும் மேற்பட்ட உளவு அமைப்பு அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்கா கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.  அதிபர் டிரம்ப் உள்பட பேதமின்றி அனைத்து தரப்பினரும் இதனால் பாதிப்படைந்து உள்ளனர்.

இதேபோன்று, அமெரிக்காவில் வெள்ளை மாளிகை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் உளவு அமைப்பு அதிகாரிகளில் 130க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சக பணியாளர்களுடன் இருந்த தொடர்பினாலோ அல்லது நேரிடையாகவோ கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  அவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த 3ந்தேதி அதிபர் தேர்தல் நடந்தது.  இதில், அதிபர் டிரம்பின் பிரசார பேரணியில் கலந்து கொண்ட உளவு அமைப்பு அதிகாரிகளுக்கு அதனால் தொற்று பரவி இருக்க கூடும் என நம்பப்படுகிறது.

இந்த அமைப்பின் 10 சதவீத பாதுகாப்பு குழுவினர் கொரோனா வைரசால் ஓரங்கட்டப்பட்டு உள்ளனர்.  இதேபோன்று கடந்த மார்ச்சில் இருந்து இதுவரை, உளவு அமைப்பு அதிகாரிகள் மற்றும் ஏஜெண்டுகளில் 300 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

சமீபத்திய அதிபர் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களில் வெள்ளை மாளிகை தலைமை பணியாளர் மார்க் மீடோவ்ஸ் மற்றும் அரசியல் ஆலோசகர்களான கோரி லூவன்டோவ்ஸ்கை மற்றும் டேவிட் போஸ்சீ உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

Next Story