உலகம் முழுவதும் ஒரே நாளில் 6.57 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு


உலகம் முழுவதும் ஒரே நாளில் 6.57 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 15 Nov 2020 12:02 AM GMT (Updated: 15 Nov 2020 12:02 AM GMT)

உலகம் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 6.57 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

ஜெனீவா,

உலக நாடுகளில் தீவிர அச்சுறுத்தலாக விளங்கி கொண்டிருக்கும் கொரோனா பாதிப்புகளின் 2வது அலை குளிர்காலத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது.  எனினும், சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், உலகம் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 6 லட்சத்து 57 ஆயிரத்து 312 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இது கொரோனா பாதிப்பு அறிய தொடங்கிய பின்னர் ஒரு நாளில் ஏற்படும் மிக அதிக எண்ணிக்கையாகும் என தெரிவித்து உள்ளது.

இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது, 5 கோடியே 31 லட்சத்து 64 ஆயிரத்து 803 ஆக உள்ளது.  இவற்றில் ஐரோப்பிய நாடுகளில் 2.85 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கும் மற்றும் அமெரிக்காவில் 2.69 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளுக்கு பலியானோர் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 9,797 ஆக உள்ளது.  இதனால் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்து 576 ஆக உள்ளது.

Next Story