ஜோ பைடன் பெற்ற வெற்றி முறைகேடாக பெறப்பட்டது- டிரம்ப் குற்றச்சாட்டு


ஜோ பைடன் பெற்ற வெற்றி முறைகேடாக பெறப்பட்டது-  டிரம்ப் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 Nov 2020 2:06 PM GMT (Updated: 15 Nov 2020 2:06 PM GMT)

ஜோ பைடன் பெற்ற வெற்றி முறைகேடாக பெறப்பட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற அதிபருக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வாகியுள்ளார். 

அவருடன் போட்டியிட்டு தோல்வியடைந்த டொனால்டு டிரம்ப், தேர்தலில் விதிமீறல்கள் நடந்ததாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு இடங்களில் குளறுபடிகள் நடந்துள்ளதாக டிரம்ப் கூறினார். தோல்வியை ஏற்கவும் டிரம்ப் மறுத்து வருகிறார். 

இந்த நிலையில், டொனால்டு டிரம்ப் இன்று வெளியிட்ட டுவிட் பதிவில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் பெற்ற வெற்றி முறைகேடாக பெறப்பட்டது; வாக்கு எண்ணிக்கையின் போது கண்காணிப்பாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை” என்றார். 

முதல் முறையாக பொது வெளியில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக டிரம்ப் கூறியிருப்பது அவர் தோல்வியை ஒப்புக்கொள்ள தயாராகி வருவதைக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது. 


Next Story