உலக செய்திகள்

டெக்ரானில் பயங்கரவாத தலைவர் கொல்லப்பட்டாரா? ஈரான் விளக்கம் + "||" + Was the terrorist leader killed in Tehran? Interpretation of Iran

டெக்ரானில் பயங்கரவாத தலைவர் கொல்லப்பட்டாரா? ஈரான் விளக்கம்

டெக்ரானில் பயங்கரவாத தலைவர் கொல்லப்பட்டாரா? ஈரான் விளக்கம்
ஈரான் தலைநகர் டெக்ரானில், அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் அப்துல்லா அகமது அப்துல்லா, தனது மகளுடன் இஸ்ரேல் படையினரால் கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார் என அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெக்ரான், 

ஈரான் தலைநகர் டெக்ரானில், அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் அப்துல்லா அகமது அப்துல்லா, தனது மகளுடன் இஸ்ரேல் படையினரால் கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார் என அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அப்துல்லா அகமது அப்துல்லா, அபு முகமது அல் மஸ்ரி என்ற பெயராலும் அறியப்பட்டிருந்தார்.ஆனால் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் லெபனானை சேர்ந்த வரலாற்று பேராசிரியரும், அவரது மகளும்தான் என கூறி, இந்த சம்பவத்தை ஈரான் மறைக்க முற்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது.இந்த நிலையில், அப்துல்லா அகமது அப்துல்லா அவரது மகளுடன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற தகவலை ஈரான் வெளியுறவு அமைச்சகம் நேற்று முன்தினம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுபற்றி ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அவ்வப்போது அமெரிக்காவும், இஸ்ரேலும் பொய்யான தகவல்களை கசியவிட்டு ஈரானை பயங்கரவாத குழுக்களுடன் சேர்க்க முயற்சிக்கின்றன. ஈரானில் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த யாரும் வசிக்கவில்லை” என கூறப்பட்டுள்ளது.இந்த அப்துல்லா அகமது அப்துல்லா, 1998-ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. ஈரானின் மறுப்பால் அப்துல்லா அகமது அப்துல்லா, மகளுடன் சுட்டுக்கொல்லப்பட்டாரா, இல்லையா என்பதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நிலத்துக்கு அடியில் சுரங்கப்பாதை அமைத்து அதிநவீன ஏவுகணைகளை பதுக்கி வைத்திருக்கும் ஈரான்
நிலத்துக்கு அடியில் சுரங்கப்பாதை அமைத்து ஏராளமான அதிநவீன ஏவுகணைகளை வைத்திருக்கும் படத்தை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.
2. ஈரானில் பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பலி
இதற்கு முன் கடந்த 2017-ம் ஆண்டு ஈரானில் அடுத்தடுத்து 2 முறை ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது நினைவு கூரத்தக்கது.
3. சரத்பவாரை தரக்குறைவாக பேசினேனா? பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் விளக்கம்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தரக்குறைவாக பேசியதாக கண்டனம் எழுந்தது. இதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
4. சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை ஏன்? கேரள முதல் மந்திரி விளக்கம்
சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் காவல் துறை சட்ட திருத்தம் கொண்டு வந்தது பற்றி கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார்.
5. ஈரானில் 3,780 சிறை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க மூத்த மத தலைவர் கமேனி ஒப்புதல்
ஈரானில் 3,780 சிறை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க மூத்த மத தலைவர் கமேனி ஒப்புதல் அளித்துள்ளார்.