நாகலாந்து மாநிலத்தில் முக கவசம் அணியாவிட்டால் அபராதம்


நாகலாந்து மாநிலத்தில் முக கவசம் அணியாவிட்டால் அபராதம்
x
தினத்தந்தி 16 Nov 2020 3:09 AM GMT (Updated: 16 Nov 2020 3:09 AM GMT)

நாகலாந்து மாநிலத்தில் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோஹிமா,

நாகலாந்து மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொது இடங்களில் முக கவசத்தை அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கைகழுவும் வசதிகளை ஏற்படுத்தாத நிறுவனங்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இதையொட்டி மாநில அரசு தலைமைச் செயலாளர் ஜே.ஆலம் விடுத்துள்ள அறிக்கையில், “பொது இடங்களில் முக கவசங்களை அணிவது, நிறுவனங்கள் கை கழுவும் வசதியை வழங்குவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது சரியாக பின்பற்றப்படுவது இல்லை என்று நாகலாந்து பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதை செய்ய தவறியவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களைச் சுற்றிலும் உள்ள மற்றவர்களுக்கும் கொரோனா பரவும் கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது” என கூறப்பட்டுள்ளது.

Next Story