உலக செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்துகளை எடுத்து கொள்ள தயங்க மாட்டேன்; ஜோ பைடன் + "||" + Do not hesitate to take corona vaccines; Joe Biden

கொரோனா தடுப்பு மருந்துகளை எடுத்து கொள்ள தயங்க மாட்டேன்; ஜோ பைடன்

கொரோனா தடுப்பு மருந்துகளை எடுத்து கொள்ள தயங்க மாட்டேன்; ஜோ பைடன்
கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்துகளை எடுத்து கொள்ள சிறிதும் தயங்க மாட்டேன் என ஜோ பைடன் கூறியுள்ளார்.
வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று புதிய அதிபராக அடுத்த ஆண்டு ஜனவரியில் ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார்.  அந்நாட்டில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் முனைப்பு காட்டாமல் டிரம்ப் இருந்து விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் பைடன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை எடுத்து கொள்வதில் நான் சிறிதும் தயக்கம் காட்டமாட்டேன்.  தடுப்பு மருந்துகளின் பாதுகாப்பு பற்றி மக்கள் தயங்குவதற்கு ஒரே காரணம் அதிபர் டொனால்டு டிரம்ப்.

அதிக தேவை உள்ள நபர்களுக்கு தடுப்பு மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பது அவசியம் என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா, கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் 11 நிறுவனங்களுள் ஒன்று. உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு கொண்ட தடுப்பூசிகளில் ஒன்றாக திகழும்  மாடர்னா நிறுவனத்தின் மருந்து 95 சதவீதம் திறன் கொண்டது என்பது பரிசோதனையில் தெரிய வந்திருப்பதாக மருந்து நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று பிஜர் தடுப்பு மருந்து 90 சதவீதம் திறன் வாய்ந்தது என கடந்த வாரம் இறுதியில் அறிவிப்பு வெளியானது.  இதுபற்றி பேசிய பைடன், சர்வதேச சமூகம் மற்றும் சர்வதேச தலைவர்களுடன் நாம் தெளிவான பாதையில் பயணிக்கிறோம்.  இந்த இரு தடுப்பு மருந்துகளையும் விஞ்ஞானிகள் சமூகம் கவனத்தில் கொண்டுள்ளது.

இந்த தடுப்பு மருந்துகள் தயாராகி விட்டது போல் தெரிகிறது.  பயன்பாட்டிற்கும் தயாராக உள்ளது.  இது தொடரும் பட்சத்தில், தடுப்பு மருந்துகளை நான் எடுத்து கொள்வேன்.  அதில் தயக்கம் காட்டமாட்டேன் என கூறியுள்ளார்.

டாக்டர் பவுசி அல்லது மாடர்னா ஆகியவை தடுப்பு மருந்துகளை மக்களுக்கு அளிப்பதில் மிகுந்த பொறுப்புணர்வை கொண்டுள்ள சூழலில், தடுப்பு மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் அதன் திறன் ஆகியவை பற்றி சான்றிழித்து விட்டால், தடுப்பு மருந்துகளை தயக்கமின்றி நானே எடுத்து கொள்வேன் என்று பைடன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாஸ்டேக் உதவியால் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான எரிபொருள் சேமிப்பு; மத்திய மந்திரி கட்காரி
பாஸ்டேக் உதவியால் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான எரிபொருள் சேமிக்கப்பட்டு உள்ளது என மத்திய மந்திரி கட்காரி கூறியுள்ளார்.
2. காதலர் தினத்தில் 15 நக்சலைட்டுகளுக்கு திருமணம் செய்து வைத்த போலீசார்
சத்தீஷ்காரில் காதலர் தினத்தில் 15 நக்சலைட்டுகளுக்கு போலீசார் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
3. இந்தியா 20 லட்சம் கோடி அளவுக்கு உற்பத்தியை விரிவாக்கம் செய்யும்: மத்திய மந்திரி உரை
இந்தியா 20 லட்சம் கோடி அளவுக்கு உற்பத்தியை விரிவாக்கம் செய்யும் என மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
4. உத்தரகாண்டில் பனிச்சரிவு; 26 உடல்கள் மீட்பு, 171 பேர் மாயம்: டி.ஜி.பி. பேட்டி
உத்தரகாண்டில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன என டி.ஜி.பி. பேட்டியில் கூறியுள்ளார்.
5. பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதங்கள், போதை பொருள் சப்ளை: பயங்கரவாத அமைப்பின் தளபதி திடுக் தகவல்
பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் சப்ளை செய்யப்படுகின்றன என கைது செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் தளபதி அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.