உலக செய்திகள்

சீனாவின் கொரோனா தடுப்பூசி எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது - விஞ்ஞானிகள் தகவல் + "||" + China's corona vaccine boosts immunity - scientists report

சீனாவின் கொரோனா தடுப்பூசி எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது - விஞ்ஞானிகள் தகவல்

சீனாவின் கொரோனா தடுப்பூசி எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது - விஞ்ஞானிகள் தகவல்
சீனாவின் கொரோனா தடுப்பூசி எதிர்ப்பு சக்தியை தூண்டுவதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பெய்ஜிங்,

கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவதற்கான முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் 10 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் சீனாவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்தநாட்டின் சினொவாக் பயோடெக் நிறுவனம் ஒரு தடுப்பூசியை தயாரித்து அதனை சோதனை செய்து வருகிறது.

இந்தநிலையில் சீனாவின் தடுப்பூசி பாதுகாப்பானது என்றும், எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவ இதழான லான்சாட்டில் வெளியிடப்பட்ட கட்டுரையில் விஞ்ஞானி சூபெங்காய் கூறும்போது, ‘சினொவாக் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை 2 டோஸ் கொடுத்த பிறகு நோயாளிகளுக்கு 4 வாரத்துக்குள் எதிர்ப்பு சக்தி உருவானது தெரியவந்துள்ளது’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் 3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு : லட்சக்கணக்கானோருக்கு பரிசோதனை
உலகில் முதன் முதலாக தொற்று பாதிப்பு வெளிப்பட்ட சீனாவில், இதுவரை 86 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. பூட்டானிய எல்லைக்குள் ஊடுருவி இந்தியாவின் டோக்லாமிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சீனா- செயற்கைகோள் படங்கள்
சீனா பூட்டானிய எல்லைக்குள் டோக்லாம் பீடபூமியின் கிழக்கு பகுதியில் இரண்டு கிலோமீட்டர் ஊடுருவி சுமார் 9 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு சாலையைக் கட்டியுள்ளது என உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்கள் காட்டுகிறது.
3. கொரோனாவை தடுக்க அவசர பயன்பாடாக சீனாவில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி
சீனாவில் கொரோனாவை தடுப்பதற்காக, அவசர பயன்பாடாக சைனோபார்ம் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை கிட்டத்தட்ட 10 லட்சம் பேருக்கு செலுத்தி உள்ளனர்.
4. தவறான வரைபடம் : இந்தியாவிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரியது டுவிட்டர்
லடாக்கினை சீனாவின் பகுதியாக சித்தரித்து தவறான இந்திய வரைபடம் வெளியிட்ட விவகாரத்தில் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் நிறுவனம் இந்திய அரசிடம் மன்னிப்புக் கோரியது.
5. ஆற்றில் தவறி விழுந்த கல்லூரி மாணவியை துணிச்சலுடன் காப்பாற்றிய இங்கிலாந்து தூதரக அதிகாரி
சீனாவில் ஆற்றில் தவறி விழுந்த கல்லூரி மாணவியை இங்கிலாந்து தூதரக அதிகாரி ஒருவர் காப்பாற்றி உள்ளார்.