பயங்கரவாதத்துக்கு நிதியுதவி ஹபீஸ் சயீத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை பாகிஸ்தான் கோர்ட்டு தீர்ப்பு


பயங்கரவாதத்துக்கு நிதியுதவி ஹபீஸ் சயீத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை பாகிஸ்தான் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 19 Nov 2020 8:42 PM GMT (Updated: 19 Nov 2020 8:42 PM GMT)

பயங்கரவாத செயல்பாடுகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் ஹபீஸ் சயீத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

லாகூர், 

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடல் மார்க்கமாக ஊடுருவி நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் பாகிஸ்தானை சேர்ந்த ஜமாத்- உத்-தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்.

மும்பை தாக்குதலை தொடர்ந்து அவரை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்க அறிவித்தது.

சர்வதேச அளவிலான நிர்ப்பந்தங்கள் காரணமாக, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்ததாக ஹபீஸ் சயீத் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்தது தொடர்பான வழக்குகளில் ஹபீஸ் சையத்துக்கு பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு கோர்ட்டு 11 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

4 பேருக்கு சிறை

இந்த நிலையில், பயங்கரவாத செயல்பாடுகளுக்கு நிதியுதவி செய்ததாக தொடரப்பட்ட மேலும் 2 வழக்குகளில் ஹபீத் சயீத் உள்பட 4 பேருக்கு பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு கோர்ட்டு நேற்று சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு கூறி உள்ளது.

இதில் ஹபீத் சயீத் மற்றும் அவரது ஆதரவாளர்களான ஜாபர் இக்பால், யாஹ்யா முஜாகித் ஆகியோருக்கு தலா 10½ ஆண்டு சிறை தண்டனையும், ஹபீசின் உறவினர் அப்துல் ரகுமானுக்கு 6 மாத சிறை தண்டனையும் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Next Story