உலக செய்திகள்

புக்கர் பரிசு 2020 : டக்ளஸ் ஸ்டூவர்ட் எழுதிய ‘ஷக்கி பெயின்’ புத்தகத்திற்கு விருது! + "||" + Booker Prize 2020: Douglas Stuart's novel Shuggie Bain wins

புக்கர் பரிசு 2020 : டக்ளஸ் ஸ்டூவர்ட் எழுதிய ‘ஷக்கி பெயின்’ புத்தகத்திற்கு விருது!

புக்கர் பரிசு 2020 : டக்ளஸ் ஸ்டூவர்ட் எழுதிய ‘ஷக்கி பெயின்’ புத்தகத்திற்கு விருது!
பிழைப்புக்காக ஓர் குடும்பம் எதிர்கொள்ளும் போராட்டம் மற்றும் அந்தப் போராட்டங்களுக்கிடையில் சோர்ந்துபோன பெற்றோர்களை நேசிக்கும் குழந்தைகள் பற்றியது
லண்டன், 

பல நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் படைப்பில் வெளியான நூல்கள், நாவல்கள் மற்றும் புதினங்களில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பிரிட்டன் நாட்டில் வெளியிடப்படும் நாவல்களில் ஆண்டுதோறும் சிறந்த நாவல் தேர்வு செய்யப்பட்டு அதற்கு பரிசு அளிக்கப்படுவது வழக்கம்.
 
கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் வழக்கப்படி, இந்த ஆண்டுக்கான சிறந்த நாவலை தேர்வு செய்ய தலைநகர் லண்டனில் ஐந்து நீதிபதிகளை கொண்ட தேர்வு குழுவினர் பல நாவல்களை படித்து, அவற்றில் சில நாவல்களை அரையிறுதிச் சுற்று போட்டிக்கு தேர்வு செய்தனர்.

இறுதிச் சுற்றுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர் அவ்னி தோஷியின் 'பிரன்ட் சுகர்' என்ற நாவல் உட்பட 6 புத்தகங்கள் தேர்வாயின. இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த எழுத்தாள டக்ளஸ் ஸ்டூவர்ட் எழுதிய 'ஷக்கி பெயின்' நாவல் புக்கர் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

 அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் முன்னாள் புக்கர் பரிசு வென்ற கசுவோ இஷிகுரோ, மார்கரெட் அட்வுட் மற்றும் பெர்னார்டின் எவரிஸ்டோ ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.

பிழைப்புக்காக ஓர் குடும்பம் எதிர்கொள்ளும் போராட்டம் மற்றும் அந்தப் போராட்டங்களுக்கு இடையில் சோர்ந்துபோன பெற்றோர்களை நேசிக்கும் குழந்தைகள் பற்றியது இந்தப் புத்தகம்.