கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்

கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்
x
தினத்தந்தி 20 Nov 2020 10:10 PM GMT (Updated: 20 Nov 2020 10:10 PM GMT)

அமெரிக்காவின் பைசர் என்கிற நிறுவனம், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் பைசர் என்கிற நிறுவனம், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது.

மனிதர்களிடம் நடத்தப்படும் பரிசோதனையில் இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்த தடுப்பூசி கொரோனாவை ஒழிப்பதில் 95 சதவீதம் திறன் வாய்ந்தது என பைசர் நிறுவனம் அண்மையில் அறிவித்தது.

இந்த நிலையில் தங்களது தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி வழங்குமாறு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்திடம் பைசர் நிறுவனம் கோரியுள்ளது.

மனிதர்களிடம் நடத்தப்படும் பரிசோதனையில் தங்களது தடுப்பூசி பாதுகாப்பானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அதை அவசர தேவைக்கு பயன்படுத்துவதற்கு அனுமதி பெற முடியும் என பைசர் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Next Story