உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகனுக்கு கொரோனா தொற்று + "||" + COVID-19: Donald Trump Jr tests positive for coronavirus

அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகனுக்கு கொரோனா தொற்று

அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகனுக்கு கொரோனா தொற்று
அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மூத்த மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர்   (வயது 42) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அறிகுறிகள் எதுவும் இன்றி அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது மருத்துவ வழிகாட்டுதல்களை பின்பற்றி வருவதாகவும் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

அதேபோல், டிரம்பின் தனிப்பட்ட  வழக்கறிஞர்  ருடி கியுலியனியின் மகன் ஆண்ட்ரூ கியுலியானியும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப், இளைய மகன் பாரன் டிரம்ப் ஆகியோர் தொற்று பாதிக்கப்பட்டு பின்னர் குணம் அடைந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது. 


தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கியது
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 37.38 லட்சத்தைக் கடந்துள்ளது.
2. அமெரிக்கா:துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட 5 பேர் பலி
அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் அதிகாலையில் ஒரு வீட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
3. கொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும், அதை எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் - அமெரிக்காவின் மருத்துவத் துறை தலைவர்
கொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும், அதை எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என அமெரிக்காவின் மருத்துவத் துறை தலைவர் விவேக் மூா்த்தி கூறி உள்ளார்.
4. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7.17 கோடியாக உயர்ந்துள்ளது
5. பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி உதவி; இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு
கொரோனா தடுப்பூசி மருந்துகளை பல நாடுகளுக்கு வழங்கி இந்தியா உதவி செய்து வருவதற்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்து உள்ளது.