உலக செய்திகள்

அதிபர் தேர்தல் விவகாரம் : பென்சில்வேனியாவில் டிரம்ப் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி + "||" + U.S. judge dismisses Trump election lawsuit in Pennsylvania

அதிபர் தேர்தல் விவகாரம் : பென்சில்வேனியாவில் டிரம்ப் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

அதிபர் தேர்தல் விவகாரம் : பென்சில்வேனியாவில் டிரம்ப் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக கூறி தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்து வருகிறார்.
வாஷிங்டன், 

உலகளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 3-ந் தேதி நடந்தது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன், தற்போதைய ஜனாதிபதியும், குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்டு டிரம்பை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.

270 தேர்தல் சபை வாக்குகளை பெற்றாலே வெற்றி என்கிற நிலையில், ஜோ பைடன் 306 வாக்குகளை பெற்றார். டிரம்புக்கு 232 ஓட்டுகளே கிடைத்தது. ஆனால் டிரம்ப் இன்னும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டி வருகிறார். தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக பல்வேறு மாகாணங்களில் டிரம்ப் பிரசார குழு வழக்கும் தொடர்ந்து உள்ளது. 

இந்த நிலையில், பென்சில்வேனியா மாகாணத்தில் தேர்தல் முறைகேடு தொடர்பாக டிரம்ப் தரப்பினர் தாக்கல் செய்த மனுவை மாவட்ட நீதிபதி தள்ளுபடி செய்தார். தேர்தலில் முறைகேடு என்ற வாதத்திற்கு வலு சேர்க்க டிரம்ப் தரப்பினர் தவறிவிட்டதாக நீதிபதி தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளை மாற்ற கடுமையான சட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டிரம்ப் தரப்பினருக்கு பெரும் பின்னடைவாக இது அமைந்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. டிரம்பிற்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்திற்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு
டிரம்ப் பதவி நீக்க தீர்மானத்திற்கு பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
2. அமெரிக்கர்களுக்கு தலா ரூ.44 ஆயிரம் கொரோனா நிவாரணம்; மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டார்
கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ 66 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்யும் வகையில், கொரோனா நிவாரண மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் அண்மையில் நிறைவேறியது.
3. திபெத்தின் தலாய்லாமா தேர்வில் சீனாவின் தலையீட்டை தடுக்கும் சட்டம்; டிரம்ப் கையெழுத்திட்டார்
திபெத்தின் புதிய தலாய்லாமாவை தேர்வு செய்வதில் சீனாவின் தலையீட்டை தடுக்கும் ஒரு சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார்.
4. ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் தொடர்ந்த வழக்கு: அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி
ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் தரப்பு தொடர்ந்த வழக்கை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
5. அமெரிக்க நகரங்களில் டிரம்ப் ஆதரவாளர்கள் பேரணி எதிர்ப்பாளர்கள் மோதலால் பதற்றம்
அமெரிக்க நகரங்களில் டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு பேரணி நடத்தினர். அவர்களுடன் எதிர்ப்பாளர்கள் மோதியதால் பதற்றம் ஏற்பட்டது.